ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சித்தர்கள் தரிசனம் # 4

சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் 





 அருப்புக்கோட்டை நகரில் , சொக்கலிங்கபுரத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் சமாதி ஆலயம். கன்னடம் பேசும் நெசவாளர் வகுப்பிலே சுவாமிகள் அவதரித்துள்ளார்கள். ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிகள் அவதரித்துள்ளதாகத் தெரிகிறது.
குடும்ப வாழ்வில் இருந்துக் கொண்டே ஆன்மிகத்திலும் உயர் நிலையினை சுவாமிகள்  அடைந்துள்ளார்கள். 

அவர்தம் லீலைகள் அடுத்த பதிவினில் .....

வெள்ளி, 20 ஜனவரி, 2012

சித்தர்கள் தரிசனம் # 3

                                            சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்



"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பத்தினது அடிகளைப்போன்றே சர்குர் அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.
அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி , மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் , அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.




                                                           ஆலயத்தின் முகப்பு 



                                                      சுவாமிகளின் ஜீவ சமாதி



                  
                                                      சுவாமிகளின் சீடரின் சமாதி


                                                        சுவாமிகளின் ஜீவ சமாதி


 இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து ,புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் , தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது  எனக் கூறுகிறார்கள்.

வியாழன், 19 ஜனவரி, 2012

ஆலயங்கள் ஆயிரம் # 4

 ஈசனுக்கே சாபம் தந்த கரூர் சித்தர் !


தெய்வங்கள் மனிதர்களுக்கும் , தேவர்களுக்கும் சாபம் தந்து பின் விமோசனம் அளித்த கதைகள் அநேகம் உண்டு. ஆயின் தெய்வத்திற்கே  சாபம் அளித்த கதைகள் மிகக் குறைவு. தேவாதி தேவன் அந்த பரமனுக்கே சாபம் அள்ளிக்கபட்டு , பின் சாப நிவர்த்தி ஆனா தலம் திருநெல்வேலி நகரிலே அமைந்து உள்ளது.

ஆம் ! அப்படி சாபம் கொடுத்தவர் சாதாரணமானவர் அல்லர். சித்தம் வென்ற சித்த பரம்பரையிலே வந்த கரூர் சித்தர்தாம் அவர். அந்த அதிசயமான நிகழ்வினைக் காண்போம்.

ஒருமுறை கரூர் சித்தர் நெல்லையப்பரை தரிசிக்க , திருநெல்வேலி வந்துள்ளார். அவர் வந்த சமயத்தில் இறைவனுக்கு பூஜைகள் நடந்துக் கொண்டு இருந்ததனால் , " நெல்லையப்பா ! " என பலமுறை  கரூர் சித்தர் அழைத்தும் , இறைவனால் பதில் அளிக்க இயலவில்லை. 

இதனால் கோபம் கொண்ட கரூர் சித்தர் , " ஈசன் இங்கு இல்லை போலும் , அதனால் தான் நான் அழைத்தும் பதில் அளிக்க வில்லை, அதனால் ஈசன் இல்லாத  இவிடத்தில் குறுக்கும்  , எருக்கும் எழுக  " என சாபம் அளித்துவிட்டு வடக்கு நோக்கி சென்றுவிட்டார்.

இதைக் கண்ட இறைவன், பூஜை முடிந்ததும்  தானே கரூர் சித்தரைத் தேடிச் சென்றான். அதேநேரத்தில்   வடக்கு நோக்கிச் சென்ற கரூர் சித்தர் மானூர் எனும் இடத்திலே , இறைவனை நடராஜ ரூபத்திலே    எண்ணி  வழிபட்டுவரும் அம்பலவாண முனிவர் என்பவரைக் காணும் பொருட்டு அங்குச் சென்றார்.


அங்கே சென்ற இறைவன் , கரூர் சித்தருக்குக் காட்சி அளித்து , அவர் சினம் தணித்து ,அங்கே நடராஜராக அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளித்து  தடுத்தாட்கொண்டார்.  தமது நடராஜர்  கோலத்திற்கு "அம்பலவாணர்"  என்று  அந்த முனிவரின் பெயரை  சூட்டிக்கொண்டார்.

பின்னர் தன்னோடு கரூர் சித்தரையும் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று , சாபத்தினை நிவர்த்தி செய்கிறார். சித்தரும் " இறைவன் இங்கு உள்ளான் எருக்கும் குறுக்கும் அறுக " என சாப  நிவர்த்தி அளிக்கிறார்.

இந்த நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மதம் மூல நட்சத்திரத்தன்று விழாவாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா , திருநெல்வலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பின்னர் ஆவணி மூலத்தன்று இறைவன் நெல்லையப்பர் ரூபத்திலே குதிரை வாகனத்திலே யானை முன்னே செல்ல  , வாத்தியங்கள்  அதன் பின்னே செல்ல திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு  மனூரை நோக்கிச் செல்கிறார். அவரோடு  பவானி அம்மன் . அகஸ்தியர், பாண்டிய ராஜா, குங்கிலிய நாயனார் , தாமிரபரணி அம்மன் ஆகியோரும் பல்லக்குகளில் உடன் செல்கின்றனர்.

வழியிலே ராமையன்பட்டி என்னும் இடத்திலே அமைந்துள்ள பெரிய இரு கல்மண்டபங்களை அடைந்து அங்கே நடைப் பெரும் பூசையினை ஏற்றுக் கொள்கிறார். இந்த மண்டபங்களுக்கு  "அம்பலம்" என்றுப் பெயர்.  அங்கே இறைவன் "நெல்லையப்பர்" எனும் ரூபத்தில் இருந்து "சந்திரசேகரர்" எனும் ரூபமாக மாறுவதாக ஐதீகம் . கால ஓட்டத்திலே  இந்த மண்டபங்கள் தற்போது முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன.  இந்த மண்டபமும் , அதனைச் சார்ந்த இடங்களும் சிலரது ஆக்கிரமப்பிலே தற்போது உள்ளதாகக் கூறுகிறார்கள்.

பின்னர் அங்கிருந்துப்  புறப்பட்டு மானூரைச் சென்றடையும் இறைவன் , கரூர் சித்தருக்கும் , அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளிக்கிறார். அதன் பின் மீண்டும் ராமையன்பட்டி வந்து நெல்லையப்பராக உருமாறி திருநெல்வேலி நகர் சென்று அடைகிறார். அவரோடு கரூர் சித்தரும் திருநெல்வேலி வந்து தனது சாபத்தினை நிவர்த்தி செய்கிறார்.

இந்த விழாவின் போது சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேலாக மக்கள் இந்த ஆலயத்திலே கூடுகின்றனர். மிகப் பெரிய விழாவாக கோலாகலமாக இத்திருவிழ நடைப் பெறுகிறது. அருகில் அமைத்துள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இவ்விழாவிலே திரளாக கூடுகின்றனர்.

இத்தகு பெருமைமிகு ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் , மானூரில்  அமைந்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் சுமார் 18 k .m  தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன் பெயர்                 :  அருள்மிகு நெல்லையப்பர்  மற்றும் அம்பலவாணர்.
இறைவியின் பெயர்           :  அருள்தரும் காந்திமதி 
தொடர்புடைய சித்தர்கள் :  கரூர் சித்தர் மற்றும் அம்பலவாண    மாமுனிகள்.

ஆலய அமைப்பு :
மானூர் பிரதான சாலையில் இருந்து , மிக அருகிலேயே ஆலயம் அமைத்து உள்ளது. பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் நடுத்தரமான அளவிலே ஆலயம் அமைந்துள்ளது.

மதில் தாண்டி உள்ளே சென்றால் தெற்கு வாசல் நம்மை வரவேற்கிறது. இங்கு நெல்லையப்பரை விட , அம்பலவாணரான நடராஜருக்கே முக்யத்துவம் என்பதால் , தெற்கு வாசலே பிரதானமான வாசலாகக் கருதப்படுகிறது.



நீண்ட அகன்ற படிகளில் ஏறி மேலேச் சென்றால் மதில் சுற்று வருகிறது . அதனைக் கடந்து உள்ளேச் சென்றால் நேராக தெற்கு நோக்கி நடராஜர் அம்பலவாணராகக்  காட்சி அளிக்கிறார்.அருகிலேயே அம்பலவாண முனிவர் லிங்க உருவிலே காட்சி அளிக்கிறார்.
























அம்பலவாணர் சன்னதி                                    அம்பலவாண முனிவர் லிங்கம்





                                                
                                        அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் சன்னதி


                                   
                                                    அருள்தரும்  காந்திமதி அம்மன்

கிழக்கு நோக்கியவாறு வலப்புறம் காந்திமதி அம்மன் சன்னதியோடு இறைவன் நெல்லையப்பராகக் காட்சியளிக்கிறார். அம்மையும் அப்பனும் காண கொள்ளை அழகு.உள்சுற்றிலே கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் , தக்ஷிணாமூர்த்தி   ஆகியோர்களது சன்னதிகள் அமைந்து உள்ளன. 

                                                                   கரூர் சித்தர் 

உள்சுற்றினில் வாயு மூலையிலே கரூர் சித்தருக்கு சிலை உள்ளது. கம்பீர்யமான அழகோடு கையினிலே தண்டோடு , இடையிலே சிறு ஆடையோடு கைகள் வணங்கிய நிலையிலே கரூர் சித்தர் காட்சி அளிக்கிறார். ஈசனுக்கே சாப விமோசனம் அருளிய , அந்த சித்தர்பிரானை மனதாரத் தொழுது நமது வினைகள் நீங்கவும் வேண்டிகொள்கிறோம்.

அவரைக் கடந்தவுடன் , சனீஸ்வர பகவான் காக வாகனத்துடன் , கைகளிலும் காகத்தோடு அபூர்வமான நிலையிலேக் காட்சித் தருகிறார். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.  அடுத்து நடராஜரைக் கடந்து  வந்தால் பைரவர் சன்னதி அமைந்து உள்ளது.





நடராஜரின் சன்னதியின் வெளியில் அமைந்துள்ள தூண்களில் மரத்தினாலான  அழகிய சிற்பங்கள் மர சட்டங்களில் பொருத்தப் பட்டு அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில் பல்வேறு புராண கதைகளின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.





ஆலய பூஜை அபிஷேகங்களுக்கு பயன்படும் பழங்கால செப்பு பானைகள் காண்பதற்கு வியப்பை அளிக்கின்றன.






 







 ஆலயத்தில் வெளி பிரகாரம்  சீராக அமைக்கப்பட்டு உள்ளது.நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கூடியதாக அமைந்து உள்ளது.







                                                              ( வெளி பிரகாரம் )











கிழக்கு வாசல் மூடப்பட்டு உள்ளது. அதன் வெளியே கொடிமரமும் , அதற்கும் வெளியே ஆலய தெப்பக் குளமும் அமைந்துள்ளன.








                                                                                                                         ( கொடி மரம்  )











ஆலய தெப்ப குளம்







கொடிமரத்தினை அடுத்து வெளி வாசலை  நோக்கிய மண்டபத்தின் தூண்களில் இந்த ஆலயத்திற்கு தொண்டாற்றிய மன்னர்களின் சிலைகள் காணப்படுகின்றன. ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.






















 இத்தனை சிறப்புகள் இருந்தும் , இந்த ஆலயம் நித்திய பூஜைகள் இன்றி இருப்பதுதான் மிகப் பெரிய குறை. மாத பிரதோஷ காலங்களில் மட்டும் பூஜைகள் நடைபெறுகின்றன. பல அன்பர்களின் முயற்சியால் தற்போது தினமும் விளக்கு மட்டும் ஏற்றப்பட்டு வருகின்றது என்பது ஆறுதல் .

அந்த கரூர் சித்தர்பிரான்தான் இந்த ஆலயத்திற்கு மீண்டும் எழுச்சியைத் தர வேண்டும் !


ஆலயத்திற்கு வர விரும்புவோர் ஆலய காவலாளியைத் தொடர்புக் கொண்டு பின் வரவும் . அவரது தொடர்பு எண் : 9791149236




செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஒரு வேண்டுகோள் !


                                               


ஐயா திரு.சிவ.மாரியப்பன் அவர்களுக்கும் 

ஐயா திரு."ஆன்மிகக்கடல்" வீரமணி 
அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் !

தங்களது விரிவான ஆன்மிக பணி யாவரும் அறிந்ததே. போற்றுதலுக்குரிய தங்களின் பணி தமிழ் கூறும் நல் உலகம் எங்கும் பரவ வேண்டும்.

 நம் தமிழ் நல் உலகில் பழமையான , அரிய , சக்தி மிகுந்த ஆலயங்கள் எத்தனையோ உள்ளன.  அவற்றில் பல ஒரு பொழுது பூஜை கூட இல்லாமல் , அவ்வளவு ஏன், விளக்கிற்கு எண்ணெய் கூட இல்லாத நிலையில் உள்ளன.
தங்களது வலையிலேயே எத்தனையோ ஆலயங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அத்தகைய ஆலயங்களில் , அந்தந்த ஊர்களில் உள்ள ஆன்மிகக்கடல் அன்பர்களின்  துணையோடு , ஒரு நாள் முழுமைக்கும் "ஓம் சிவ சிவ ஓம் " நாம வேள்வியினை நடத்தி வைக்க வேண்டுகிறேன். இதனை வாரத்தின் முதல் நாளாம் ஞாயிறு அன்று செய்யலாம் .

இதனால் ....
தினசரி ஜபம் செய்வதில் தொய்வு ஏற்படும் அன்பர்களும் பயன்   அடைவார்கள் . அன்பர்களின் அனுபவங்களும் ஒருவருக்கொருவர் நேரடியாக பரிமாறிக்கொள்ளப் படும். ஆலயங்களும் மீண்டும் எழுச்சி அடையும். நமது ஜப வேள்வியும் நாடெங்கும் பரவும் .

நன்றிகள்


பக்தி யுகம்

திங்கள், 9 ஜனவரி, 2012

கழுகுமலை பௌர்ணமி கிரிவலம்

கழுகுமலை பௌர்ணமி கிரிவல தரிசனம்

                                       (கிரிவல பாதையில் மலையின் தோற்றம் )

8 /1 /2012 அன்று கழுகுமலையில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாலை 6 மணி அளவிலே கிரிவலம் இறை நாமத்துடன் துவங்கியது. அன்று ஆருத்ரா தரிசனம் என்பது கூடுதல் சிறப்பு.

நவதானியமும். டயமன்ட் கல்கண்டும் கலந்து கொண்டுவரும்படி "ஆன்மிக கடல் " அன்பர்கள் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப் பட்டு இருந்தனர். அதன்படி நிறய பேர் கொண்டு வந்து கிரிவல பாதை முழுவதிலும் அதனை தூவி வந்ததைக் காண முடிந்தது.



மாலை அரையிருட்டில் மலையின் தோற்றம் 








நவதானியம் மற்றும் டயமன்ட் கல்கண்டை தூவிய படியே கிரிவலம் செய்யும் பக்தர்கள்.



 கிரிவல பாதையில் கம்பீர விநாயகர் 


கிரிவல பாதையில் நான் கண்ட முதியவர்.

எளிய தோற்றம்
கனிந்த முகம் ,
நெற்றி நிறைய திருநீறு
மெதுவான நடை.



 







 கிரிவல பாதையின் பசுமை கோலம்




 








கிரிவல பாதையில் அமைந்து உள்ள சித்தர் ஆலயம்







அய்யா.திரு. சிவா.மாரியப்பன் அவர்கள் மஞ்சள் ஆடையில் முன்னே செல்ல , "ஆன்மிக கடல் " அய்யா.திரு.வீரமணி அவர்கள் பின்னே மலையையும், மக்கள் கிரிவலம் செல்லும் காட்சிகளையும் தனது கேமரவிலே பதிவு செய்தபடி பின் தொடர்ந்தார்.



கோவில் தூணில் காணப்படும் அற்புதமான சிற்பம். இதில் உள்ள தெய்வம் யார் என யாரவது கூறினால் நன்று.






 இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பயன்படும் தெப்பக்குளம்.






 




 இரவில் ஒளிரும் கழுகுமலை ஆலயம்












சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் கிரிவலம் நடைப் பெற்றது.அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள்  கிரிவலம் முடிந்தவுடன் அன்பர்களின் பிரச்சனைகளுக்கு எளிய பரிகாரங்களை எடுத்துக் கூறினார்கள் .பொதுவாக ஆற்றங்கரை ஓரம் அமைந்த கோவில், மலைக்கோவில் , கடற்கரைக் கோவில் இவற்றில் பௌர்ணமி நாட்களில் வளம் வருவது சிறப்பு எனக் கூறுவார், நாமும்  இதனை பயன் படுத்துவோம். 


குருவே சரணம்.
 வாழ்க வளமுடன்.




வியாழன், 5 ஜனவரி, 2012

திரு.சித்தர் மணி

நறுமணப் பொருட்களால் இறைப் பணி ஆற்றும் நெல்லை திரு.சித்தர் மணி அவர்கள் .





திருநெல்வேலி மாவட்டம் புதிய பேட்டையில் வசித்து வரும் அய்யா திரு.சித்தர். மணி அவர்கள் , பல்வேறு நறுமண பொருட்களால் மிகப் பெரிய இறைப் பணியினை செய்து வருகிறார்.

ஜவ்வாது , அத்தர், புனுகு , மலர் நறுமண பொருட்கள் என பல்வேறு பொருட்களை  சித்தர் போகரின் சூட்சுமமான வழிகாட்டுதலின்படி  தயார் செய்து இறை பணியினை செய்து வருகிறார். சிறந்த வியாபார பொருளாகவும் திகழ்கிறது.

அவரது பிரத்யேக பேட்டி விரைவில் வெளியிடப் படும்.

 அவரது அலை பேசி : 9362607712 

sidharkhadi .blogspot.com 
sidhar-mani.blogspot.com

 

சித்தர்கள் தரிசனம் # 2



ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்


அருப்புக்கோட்டை நகரில் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாக்ஷி சொக்கநாதர்  கோவில். அதன் அருகில் அமைந்துள்ள தெப்பக் குளத்தின் கரையிலே  சமாதி கொண்டு அருளும் மகான் ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் ஆவர்.

தற்போது சமாதி சீரமைக்கப்பட்டு , கல்லால் கோவில் எழுப்பி வருகின்றனர்.
சுவாமிகளைப் பற்றிய தகவல்கள் விரைவில் வழங்கப்படும். 

கழுகு மலை கிரிவல அனுபவம்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

கடந்த மாதம் அம்மாவாசை அன்று கழுகு மலையில் நடைபெற்ற கிரிவலம் நிகழ்ச்சியிலே குடும்பத்தோடு கலந்து கொள்ளும் வாய்ப்பினை இறைவன் அருளினான். அய்யா திரு.சிவ.மாரியப்பன் அவர்களிடம் தொலைபேசியில்  தொடர்புக் கொண்டு கிரிவலம் நிகழ்வினை உறுதி செய்த பின்பு , நான் , எனது மனைவி , தாயார் மற்றும்  மகன் ஆகியோர் கழுகுமலைக்கு புறப்பட்டோம்.

அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் முன்பே எங்களுக்கு பழக்கமானதால் , அவரைக் குறித்தும் , கிரிவலம் குறித்தும் நானும் எனது மனைவியும் பேருந்தில் பயணம் செய்யும் போது பேசிக் கொண்டே வந்தோம்.

அப்போது என் மனைவி " அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் சித்தர்கள் குறித்து நிறைய கூறுகிறார்கள், அவர்களை எல்லாம் நேரிலேயே தரிசனம் (சூட்சுமமாக )அடைந்து வருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை, நமக்கு புரியும் படியாக நமது கண்களுக்கு தெரியும்படியாக தரிசனம் கிடைப்பது இல்லை." என  ஆதங்கத்துடனும் சற்றே வேடிக்கையாகவும்கூறினார்.

பின்னர் நாங்கள் கழுகுமலையை அடைந்து , அய்யாவை சந்தித்த பின்னர் கிரிவலதினைத் தொடர்ந்தோம்.அம்மாவாசை இருளிலே இயற்க்கையாக அமைந்து கருமையின் பின்னணியோடு இறை சிந்தனையோடு நடைபெற்ற கிரிவலம் அருமையானது.

இருளின் மோனத்தில் , மனதிலே "ஓம் சிவ சிவ ஓம் " மந்திரத்தோடு மலையை கிரிவலம் வரும்போது நம்முள் உணரும் அதிர்வுகளை வார்த்தைகளில் கூறிவிட இயலாது.



அந்த நாளின் முக்கியத்தினை அறிந்து சேலம் ,வேலூர் ,நெல்லை ,விருதுநகர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் அன்பர்கள் இந்த கிரிவலத்தில் கலந்துக்கொண்டனர்.

கிரிவலம் 90 % நிறைவுற்ற நிலையிலே , என் மனைவி " வெளியூரிலே இருந்து இத்தனை பேர் வந்து உள்ளனர், இரவு 8 .30  மணி வேறு ஆகிவிட்டதே , உணவுக்கு என ஏற்படும் யாரும் செய்ய வில்லையே , பாவம் எல்லோரும் பசியோடு அல்லவா கிளம்ப நேரிடும் " என எண்ணி உள்ளார்.


கிரிவலம் முடிந்து , திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் சிறிய உரை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் போதே , சிலர் கோவில் பிரகாரத்தில்  இலை போட்டு கேசரி,பொங்கல் , சட்னி , சாம்பார் என அருமையான உணவினை அனைவருக்கும் நிறைவாக வழங்கினார்கள் .


சாப்பிட்டு விட்டு கிளம்பும் அனைவருக்கும் , கேலண்டர் ஒன்றினையும் வழங்கினர். நாங்கள் சாப்பிட்டு விட்டு , உணவு வழங்கியவரிடம் எங்களது நன்றியினைத் தெரிவித்து விட்டு , " அடுத்த முறை நீங்கள் இங்கே அன்னதானம் வழங்கும் போது , எங்களது இந்த காணிக்கையையும் அதிலே சேர்த்துக் கொள்ளுங்கள் " எனக் கூறி ரூ.100  ( என்னால் இயன்றது ) வழங்கினேன், அவர்கள் அந்த ஊரிலேயே இருப்பவர்கள் என்றும் , வழக்கமாக  அன்னதானம் செய்பவர்கள் என்றும் நான் மனதிலே எண்ணி இருந்தேன்.


ஆனால் அவர்கள் அதை வாங்க மறுத்ததுடன் , தங்களுக்கு கோவை என்றும் , இன்று கிரிவலம் நடைபெறுவது முன்பே தெரியாமலேயே அங்கு வந்ததாகவும் , வந்த இடத்தில அன்னதானம் செய்ததாகவும் கூறிய பொழுது ,
பசித்த நமக்கு  படி அளந்த அந்த பரம குரு முருகப்பெருமானையும் , அகத்திய மகரிஷியையும் நன்றியோடு மனதிலே வணங்கினேன்.


"அப்படி என்றால் இத்தனை கேலண்டர்கள் எப்படி கொடுத்தீர்கள்  "என கேட்டேன்.


"நாங்கள் வருடந்தோறும் இந்த கேலண்டர் வழங்கும் பணியினை ஜனவரி ஒன்றாம் தேதி அன்று திருசெந்தூரிலே செய்து வருகிறோம். அதற்காக வைத்து இருந்த கேலண்டர்களைத் தான் இங்கே வழங்கினோம் " என்றனர்.


நாங்கள் மகிழ்வோடு அந்த கேலண்டர்களைப் பிரித்துப் பார்த்தல் , 18 சித்தப் பெருமக்களும் சூழ அகத்தியப் பெருமான் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒன்றும் , சித்தர்கள் சூழ முருகப் பெருமான் தவத்தில் ஆழ்ந்திருக்கும் கோலத்தில் ஒன்றுமாக இரண்டு கேலண்டர்களும் அமைந்து இருந்தன.


எனக்கும் என் மனைவிக்கும் " நமக்கெல்லாம் புரியும்படியாக , கண்களிலே சித்தர்கள் காட்சி தருவார்களா ? " என என் மனைவி பேருந்தில் கேட்ட கேள்வி ஒரே நேரத்திலே மனதிலே எதிரொலித்தது


நன்றி இறைவா!

குருவே சரணம்
வாழ்க வளமுடன்