செவ்வாய், 10 மே, 2016
சனி, 26 மார்ச், 2016
திங்கள், 1 டிசம்பர், 2014
மஹா அவதார் க்ரியா பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா
கி.மு.203 ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் நாகராஜ் என்ற பெயரில் அவதரித்தவர் ஸ்ரீ மஹா அவதார் பாபாஜி அவர்கள்., பழநி மலையில் ஸ்ரீ போக மஹரிஷியிடம் ஆஸ்தான சீடராக இருந்து யோகம் பயின்றவர். மேலும் ஸ்ரீ அகத்திய மஹரிஷியிடம் க்ரியா யோகம் பயின்று , இமய மலையில் உள்ள பத்ரிநாத்துக்கும் மேல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சொரூப சமாதியில் ஆழ்ந்துள்ளார் இவர்.
நிகழும் ஜய வருடம் கார்த்திகை மாதம் 21 ம் தேதி 07/12/2014 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9.30 மணிக்கு ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா சென்னை , பூவிருந்தவல்லி , ராமானுஜ கூடத் தெருவில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து ஆன்மீக மெய்யன்பர்களும் இதில் கலந்துக் கொண்டு குரு அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
7 / 12 /2014 - ஞாயிறு
காலை 9.30 மணிக்கு கலச பூஜையும் , மஹா யாகமும்
காலை 11.00 மணிக்கு அபிஷேகம்
நண்பகல் 12.00 மணிக்கு அர்ச்சனை , அலங்காரம்
நண்பகல் 12.30 மணிக்கு தீப ஆராதனை , திரு உருவ படம் வழங்கல்
பிற்பகல் 1.00 மணிக்கு சம பந்தி போஜனம் , பிரசாதம் விநியோகம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்ஙனம்
பூவிருந்தவல்லி அன்பர்கள் மற்றும் வெளியூர் அன்பர்கள்
தொடர்புக்கு
9600037092
9841704501
9150010740
8925548022
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கழுகுமலை சித்தர் கிரி வலம்
உலகத்தை ஒரு வீடாக ஆக்கினால்,அந்த வீட்டின் பூஜை அறையாக நமது பாரத நாடு இருக்கும்;பூஜையறையின் க்ஷேத்திர மையமாக நமது தமிழ்நாடு இருக்கும்;உலகின் மூத்த இனமான தமிழ் இனமே ஆன்மீகத்தின் ரிஷிமூலமாக இருந்துவருகிறது.எழுத்தில் சொல்ல முடியாத,இணையத்தில் எழுதமுடியாத ஏராளமான ரகசியங்கள் நமது முன்னோர்களிடம் இருக்கின்றன.நமது முன்னோர்களும் சரி,நாமும் சரி சித்தர்களின் வம்சாவழியினர் தான்!
சித்தர்களின் பரம்பரையில் நமக்காக வழிகாட்டி வருபவரே நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்.பல ஆன்மீக குருமார்கள் தமது பிரதான சீடர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பல ஆன்மீக ரகசியங்களை நமது நலன்களுக்காக வெளிப்படையாக தெரிவிப்பவர் நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்!
15 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை( நூறு ஆண்டுகளுக்கு மூன்று தலைமுறை என்று கணக்கிட்டுக் கொண்டால்,1500 ஆண்டுகளை 45 தலைமுறைகளுக்கு ஒருமுறை என்று எடுத்துக் கொள்ளலாம்) முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் ஒன்றாக கிரிவலம் வருகிறார்கள் என்பது பல நூற்றாண்டுகளாக பலருக்குத் தெரியாத ரகசியம்!
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று கழுகுமலைக்கு முதன்மை சித்தர்களாகிய பதிணெண் சித்தர்களும் கிரிவலம் வருகிறார்கள்.அப்பேர்ப்பட்ட மகத்தான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனில் நமது பூர்வபுண்ணியம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்;
2011 மார்கழி மாத கிரிவலத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அவரவர் முன்னோர்களாகிய சித்தர் தரிசனம் கிரிவலம் செல்லும் போதே கிட்டியது.அவ்வாறு கிட்டியதால்,அடுத்த சில நாட்களில் அவர்களின் நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன;பலருக்கு நீண்டகால அதே சமயம் நியாயமான ஏக்கங்கள் நிறைவேறின.
2012 மார்கழி மாத கழுகுமலை கிரிவலத்தில் பாரத நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து 700 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டவர்களுக்கு கிடைத்த சித்தர்களின் ஆசியைப் பற்றி எழுத தனி வலைப்பூவே ஆரம்பிக்கலாம்;அவ்வளவு பலன்கள் கிட்டின;வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்தது;வேலையில் நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிட்டியது;தொழிலில் ஸ்திரமில்லாமல் கடனில் தவித்தவர்களுக்கு கடன்கள் தீர்ந்தன;மருத்துவ உலகிற்கே சவால் விடும் பல நோய்கள் தீர்ந்தன;30 ஆண்டுகாலமாக இருந்துவந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன;குழந்தை வரம் வேண்டி ஏங்கி தவித்தவர்கள் பலருக்கு சித்தர்பெருமக்களின் ஆசியால் குழந்தை கிடைத்தன;திருமணத் தடையால் மனம் வெதும்பிய பெற்றோர்கள் ஆழ்ந்த நிம்மதியை அடைந்தனர்;வராக் கடன்கள் வசூல் ஆகியது;இவையெல்லாம் சராசரி மனிதர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கான பின்னூட்டங்கள்!
ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பியவர்களுக்கு அவரவர்களின் ஆன்மீக படிநிலையைப் பொறுத்து முன்னேற்றங்கள் கிட்டின;பலர் தமதுமுன்னோர்களாகிய சித்தர்களால் ஸ்பரிச தீட்சை பெற்றனர்;சிலர் அன்று இரவு அல்லது மறு நாள் இரவு கனவில் தமது முற்பிறவி குருவாக இருந்த சித்தர்களிடம் பேசும் பாக்கியம் பெற்றனர்.இன்னும் சிலருக்கு தாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்? என்பதை உணர்ந்தார்கள்.
பல ஆண்டுகளாக தியானம் செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய முன்னேற்றத்தை அடைய முடியாமல் தவித்தார்கள்;அவர்களுக்கு இந்த கழுகுமலை கிரிவலம் முன்னேற்றத்தை அடைய உதவியது;
இந்த வருடம் 16.12.2013 திங்கட்கிழமையன்று 18 சித்தர்களும் ஒன்றாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்;நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சுமமான உலகத்தில் இருந்து வந்து நமக்கு ஆசி தர இருக்கிறார்கள்;
வடக்கு தமிழ்நாட்டு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 15.12.2013 அன்றே கோவில்பட்டி அல்லது சங்கரன் கோவிலுக்கு வந்து தங்கிக் கொள்வது நன்று;கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் கிராமமே கழுகுமலை ஆகும்.
ரயில் மார்க்கமாக கோவில்பட்டி அல்லது சங்கரன்கோவில் வந்தடைய வேண்டும்;கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவிலுக்கும்,சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கும் நிமிடத்துக்கு ஒரு பேருந்து(டவுண் பஸ்ஸீம்,ரூட் பஸ்ஸீம்) பயணித்துக் கொண்டே இருக்கின்றன;பயண நேரம் அதிகபட்சமே 30 நிமிடங்கள் தான்!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்;ஒவ்வொருவரும்(குடும்பத்தோடு வருபவர்களுக்கு விதிவிலக்கு உண்டு;ஒரு குடும்பத்திற்கு ஒரு ஐந்து கிலோ நவதானியங்களும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டும் போதும்!)ஐந்துகிலோ நவதானியங்கள்(எல்லாம் கலந்தது),ஒருகிலோ டயமண்டு கல்கண்டு நமது ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு 2 மணிக்கே கழுகாச்சலமூர்த்தி கோவிலுக்கு வந்துவிடுவோம்;மதியம் சரியாக 3 மணிக்கு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தி ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலப் பாதை 3 கி.மீ.தூரமே! வழியில் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும்; கிரிவலம் நிறைவடைந்ததும்,ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்வோம்;நிகழ்ச்சிகள் அனைத்து மாலை 6 மணிக்கு நிறைவடைந்துவிடும்;புயல் காலமாக இருப்பதால்,மழை வரும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன;போதுமான முன்னேற்பாடுகளுடன் வருவது நல்லது.
பிறகு,வேறு எந்த ஊருக்கும் செல்லாமலும்,பிறரின் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்குத் திரும்புவோம்.
அடுத்த கழுகுமலை கிரிவலம் கி.பி.3511 ஆம் ஆண்டில் வருவதால்,(1500 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த அரிய வாய்ப்பை ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்வது நமது நிம்மதியான,வளமான வாழ்க்கைக்கு வழி!!! நன்றி : ஆன்மிகக்கடல்
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
ஓம் சிவ சிவ ஓம் ! வாழ்வில் முன்னேற விரும்பும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

தனது ஆன்மிகத் தன்மையினால் , பிரதி பலன் இன்றி சேவை ஆற்றி , பலரது வாழ்வில் விளக்கேற்றி வரும் , அய்யா திரு.சஹஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்தித்து , அதன் மூலம் தங்களது நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பும் அன்பர்கள் இந்த லிங்கை ( link) கிளிக் செய்யவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




