திங்கள், 30 ஏப்ரல், 2012

ஜகத்குருவின் இராமயன்பட்டி விஜய யாத்திரை



ஜகத்குரு   ஸ்ரீ  ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசுவாமிகள்  தனது  விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக , திருநெல்வேலி மாவட்டம் , இராமயன்பட்டி கிராமத்திற்கு 29/04/2012  அன்று விஜயம் புரிந்தார்கள். அவர்களுக்கு , கிராமத்தின் சார்பினில் மேல தாளங்களுடனும் , வேத கோஷங்களுடனும் பூரண கும்ப மரியாதையுடன்  மனம் நிறைந்த வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. 

கிராமத்தின் பெண்கள் தீப ஒளியுடன் கூடிய ஹாரத்தி காட்டி தங்களது பக்தியினை தெரிவித்தனர். இராமயன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள , அக்ரஹாரம் தெரு   ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகள் , அங்கு நடைபெற்ற தீபாராதனை பூஜையினில் பங்குபெற்று , தரிசனம் செய்தார்கள். 

பின்பு அங்கு கூடி இருந்த பக்தர்களுக்கு அருளாசியும் , மந்திராக்ஷதையும் வழங்கிய மஹாசுவாமிகள் , அங்கிருந்து புறப்பட்டு , இராமயன்பட்டியில் அமைந்துள்ள "பண்ணை இல்லத்திற்கு " சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு , பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. 

அன்று இரவு பண்ணை இல்லத்திலே , மகாஸ்வாமிகள் "சந்திரமௌலீஸ்வரர் " பூஜையினை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். 

மஹாசுவாமிகளுக்கு  இராமயன்பட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் அளிக்கப்பட  வரவேற்ப்பினை காண இங்கே கிளிக் செய்யவும் .



ஹோமங்களும் அவற்றின் பலன்களும்



கணபதி ஹோமம் - காரிய தடை நீங்கும் , விரைவாக காரியங்கள் நடைபெறும் 

நவக்ரஹ ஹோமம் - நவக்ரஹ தோஷம் நீங்கிட

தன்வந்திரி ஹோமம் - விதிகள் நீங்கி , ஆரோக்கியம் பெற்றிட

ருத்ர ஹோமம்  - நாம் செய்த தவறுகள் , பாவங்கள் ஆகியவற்றிற்கு            
                                     பிராயச்சித்தமாக செய்வது    

ம்ருத்யுஞ்ச ஹோமம் - ஆயுள் , ஆரோக்கியம் பெற

லக்ஷ்மி ஹோமம் - லக்ஷ்மி கடாக்ஷம் பெற 

சந்தான கோபால ஹோமம் - குழந்தை பாகியம் கிடைக்க  
 
ஆயுஷ்ய ஹோமம் - நீண்ட ஆயுள் கிடைத்திட 

துர்க்கா ஹோமம் - காரியங்களில் வெற்றி அடைய 
 

சிவ பஞ்ச பீட தலங்கள்

திருநெல்வேலி , நாகர்கோவில்  மாவட்டங்களில் அமைந்துள்ள சிவ பஞ்ச பீட தலங்கள் 

கூர்ம பீடம்   -   பிரம்ம தேசம் 
பத்ம பீடம்      -  தென்காசி 
குமரி பீடம்     -   கன்யாகுமரி   
சக்தி பீடம்      -   குற்றாலம் 
கமலா பீடம்  -    திருநெல்வேலி 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

ஸ்ரீ ராமபிரான் தரிசித்த பஞ்ச கிரி தலங்கள்



ஸ்ரீ ராமபிரான் வனவாசம் வாழ்ந்த காலத்திலே,  சீதையை தேடி தென் பாரதம்  வரும் சமயம் , பல்வேறு ஆலயங்களுக்குச்  சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார். 

அவ்வகையிலே  தென்பாண்டி நாட்டிலே , அவர் வழிபட்ட ஆலயங்களில் சில திருநெல்வேலி மாவட்டத்திலே அமைந்துள்ளன. 

1 . களக்காடு          -   சத்யவாகீசம்  
2 . பத்தை                -   குலசேகரநாதம்
3 . தேவநல்லூர்   -   சோமநாதம்
4 . பதுமன்ஏரி      -     நெல்லையப்பர் 
5 . சிங்கிகுளம்       -  கைலாசநாதம்

இந்த தலங்கள் ஐந்தும் பஞ்சலிங்க தலங்கள், பஞ்சகிரி தலங்கள் மற்றும் பஞ்ச கிரி தலங்கள் என அறியப்படுகின்றன. 
  

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் மே மாத பயண விவரம்



 ஆதி சங்கர பகவத்பாதர் அமைத்த ஆம்னாய பீடங்களில் முதன்மையானது , கர்நாடக மாநிலம் - சிருங்கேரியில் அமைந்துள்ள தக்ஷிணாம்னாய பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடம் ஆகும். இதன் ஆசார்ய பரம்பரையில் 36 வது பீடாதிபதியாக விளங்கும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் , தற்சமயம் தமிழ்நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். 

அவர்களது மே மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஸ்ரீ சாரதா மடத்தின்  வெப்சைட் - ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


புதன், 25 ஏப்ரல், 2012

ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ

விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டை அருகினில் உள்ள கற்றங்குடி எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ காட்சியினைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் ....

வியாழன், 12 ஏப்ரல், 2012

கழுகுமலை கிரிவல பாதை வீடியோ காட்சி !

தூத்துக்குடி மாவட்டம் , கழுகுமலை கழுகாசல மூர்த்தி  ஆலய கிரிவலம் ஒவ்வொரு பௌர்ணமி அன்று மலை 6 மணி அளவிலே நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெற்ற ஒரு கிரிவலத்தின் ஒரு பகுதியினை காண இங்கே கிளிக் செய்யுங்கள் .

http://www.youtube.com/watch?v=GUY81US4hOM&feature=player_detailpage
பக்தியுகத்தின் இனிய  தமிழ்  புத்தாண்டு   வாழ்த்துகள் !

பிணியறு உடல் அமைக!
உறுதியான உள்ளம் அமைக!
தெளிவான புத்தி அமைக!
உண்மையான குருவின் வழிநடத்துதல் அமைக!
மந்திரம் பலம் கூடுக!
கரையிலா வருமானம் பெருகுக!
பாரெலாம் இயற்கை வளம் பெருகுக!
மாந்தர் உள்ளம் எல்லாம் சாந்தி நிலவுக!

ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி :    
வாழ்க வளமுடன் !

 

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஸ்ரீ மிளகாய் பழ சித்தர் ஜீவ சமாதி வீடியோ காட்சிகள் # 2

கழுகுமலை ஸ்ரீ மிளகாய் சித்தர் ஜீவ சமாதியின் மற்றொரு வீடியோ காட்சி

http://www.youtube.com/watch?v=R7D4NXzEmC0&feature=player_detailpage

கழுகுமலை ஸ்ரீ மிளகாய் பழ சித்தர் ஜீவ சமாதி வீடியோ காட்சிகள் # 1

கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி ஆலய கிரிவல பாதையில் அமைந்துள்ளது  ஸ்ரீ மிளகாய் பழ  சித்தர் ஜீவ சமாதி ஆலயம்.  ஒரு வயதான பெண்மணிதான் இவ்வாலய வழிபாட்டினை மிக சிரத்தையாக செய்து வருகிறார். இவர்களது குடும்பத்தார்தான் பரம்பரையாக இவ்வாலய பூசையினை செய்து வருகின்றனர்.

இவ்வாலயத்தில் மிளகாய் பழம் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த மிளகாய் பழத்தினை ஒரு   சொம்பு தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மறுநாள் அந்த பழத்தினை எடுத்து விட்டு அந்த தண்ணீரினை வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டும். பின் மீண்டும் அந்த சொம்பில் தண்ணீர் விட்டு அந்த மிளகாய் பழத்தினை அதில் போட்டு பூஜையில் வைக்க வேண்டும். இவ்விதமாக      மூன்று நாட்கள் நாட்கள் செய்ய வேண்டும். 

மூன்றாம் நாள் அந்த மிளகாயினை நமது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நமது நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. இந்த ஜீவ சமாதிக்கு மிளகாய் பழத்தினை காணிக்கையாகக் கொண்டு சென்று சமர்ப்பிக்கும் வழக்கமும் உள்ளது. 


ஸ்ரீ மிளகாய் பழ சித்தர் ஜீவ சமாதி வீடியோ காட்சி # 1 

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் மணிமண்டபம் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலே , பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது. அதன் வீடியோ லிங்க்:
http://www.youtube.com/watch?v=gtDGMz3oTDE&feature=player_detailpage