வெள்ளி, 1 ஜூன், 2012

அபூர்வமான மகாலட்சுமி ஸ்தோத்திரம்


இது பழையக் கால புத்தகம் ஒன்றினில் ( புத்தகத்தின் பெயர் : தர்ம வர்த்தனீ ) , "ஸ்ரீ திரிபுரா ரஹஸயம்"  என்ற கதையில் , கிளை கதையாக வரும் ஒரு சுலோகம் . இதனை ஸ்ரீ ரங்கத்தைச் சார்ந்த எஸ். ஜானகி என்பவர் ஒரு ஆன்மிக புத்தகத்திலே வெளியிட்டு இருந்தார். அவருக்கு நன்றி .

தேவர்கள் ஸ்ரீயாகிய மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தனை செய்த சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை வெள்ளிகிழமைகளில் சொல்லி பூஜை செய்பவர்களுக்கு , ஒப்பற்ற செல்வம் உண்டாகும் என்று தேவர்களிடம் ஸ்ரீ தேவி கூறி அருளினாள்.

1 நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை பத்மாயை ஸததம் நம /
   நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம //

2 த்வம் ஸாக்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா /
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ //

3 பரமானந்ததா அபாங்கி ஹ்ருத சம்ஸ்ருத்த துர்கதி : /
  அருணா நந்தினீ  லக்ஷ்மீ :  மஹாலக்ஷ்மீ : திரிசக்திகா //

4  ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா /
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி : //

5 . ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி /
ரமா ரக்ஷ்க்ஷாகரீ   ரம்யா ரமணீ மண்டலோத்தமா //


( இந்த ஸ்லோகத்தில் ஏதாவது பிழை இருந்தால் , தயவு செய்து தெரிவிக்கவும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக