செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்





ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் /
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (1)

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் /
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (2)
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (3)
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (4)
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் /
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (5)
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே /
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (6)
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா /
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (7)
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் /
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (8)
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: /
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி //

திங்கள், 17 செப்டம்பர், 2012

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை






 குழந்தை பேறு கிடைக்க சொல்ல வேண்டிய  

சௌந்தர்யலஹரி  சுலோகம்  

சதுர்பி ஸ்ரீகண்டை :  சிவ யுவதிபி:  பஞ்சபிரபி
ப்ரபின்னாபி:சம்போர -    நவபிரபி மூல பிரக்ரிதிபி:
சதுசத்வா ரிம்சத் -வசுதல கலாசர - த்ரிவலய-
த்ரிரேகாபி  சார்த்தம்  தவ  சரண கோணத்  பரினத்:

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் இயற்றிய சகலகலாவல்லி மாலை


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

சனி, 8 செப்டம்பர், 2012

சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி




 ( சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி  )

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அமைந்திருக்கும் சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி கும்பாபிஷேகத்திற்குப்   பிறகு, புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. நான்கு தூண்களோடு அமிந்துள்ள வெளி மண்டபத்தினை அடுத்து , அர்த்த மண்டபம் உள்ளது. இதில் பலி பீடமும் , நந்தியும் அமைந்துள்ளன. அடுத்து கருங்கல்லால் அமைக்கப் பத்துல்ல கருவறையில், ஜீவ சமாதி அமைந்துள்ளது. சிறிய மதிலுடன் கூடிய வெளி சுற்று உள்ளது.



(  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் )
 இந்த ஆலயத்தில் ஈசான்ய மூலையில், மேற்கு நோக்கிய வாறு அருள்கிறார் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி. இவருக்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் அதி காலையில் 3 மணி அளவில் தொடங்கி, யாகங்களும் பூஜைகளும்    நடைப் பெறுகின்றன. 

சித்தர்களால் பூஜிக்கப்பட்டதாகக் கருதப்படும் படித்துறை விநாயகர்




அருப்புகோட்டை நகர்  முற்காலத்தில் , வில்வ மரங்கள் நிறைந்த வில்வ வனமாக இருந்துள்ளது. இங்குள்ள மீனாக்ஷி அம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம், பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னனுக்கு ஒரு சாபத்தினால், உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டு, அந்த சாப நிவர்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக் குளத்தினை வெட்டினான்.

அவ்வாறு அந்த திருக்குளம் வெட்டும் காலத்திலே , அந்த இடத்திலே புதையுண்டுக் கிடந்த , அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன்  தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். 
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக் குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள ஆஸ்திக அன்பர்களால் , இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப் பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் முறையாக நடைப் பெற்று வருகின்றன. 

இந்த ஆலய வடிவமைப்பு , சென்னை திரு.கணபதி ஸ்தபதியினால் செய்யப்பட்டு உள்ளது. ஆலயம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 

அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு இவர் ஒரு வரப்ரசாதி என்பது அனுபவ உண்மை. 



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.  
 
- இந்த கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும்  பெறலாம்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின் பெருமைகளையும், வாழ்க்கை குறிப்புகளையும் , நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார், தற்சமயம் சுவாமிகளின் ஜீவசமாதியினை பராமரித்துவரும் முதியவர்.
வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யுங்கள் 
kalugumalai sri subramaniya swami's life history

வியாழன், 6 செப்டம்பர், 2012

காஞ்சி மஹாபெரியவாளின் ஜாதகம்

நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மஹாபெரியவாளின்  ஜாதகம். இதனை டவுன்லோட் செய்து நமது பூஜை அறையில் வைத்துக் கொள்வோம். 




நன்றி .
ttp://srisrisrimahaperiyaval-meelaadimai.blogspot.in/
 கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின் புகைப்படம் 

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஜீவ சமாதி


கழுகுமலையில் கிரிவல பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மிளகாய் பழ சித்தர்  ஜீவ சமாதிக்கு அருகில் அமைந்திருக்கிறது ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின்  ஜீவ சமாதி. இதனை தற்சமயம் பராமரித்து, வருகிறார் முதியவர் ஒருவர். அவர் கழுகுமலை முருகன் கோவிலிலேயே தங்கி இருக்கிறார்.