ஞாயிறு, 15 டிசம்பர், 2013

1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கழுகுமலை சித்தர் கிரி வலம்



உலகத்தை ஒரு வீடாக ஆக்கினால்,அந்த வீட்டின் பூஜை அறையாக நமது பாரத நாடு இருக்கும்;பூஜையறையின் க்ஷேத்திர மையமாக நமது தமிழ்நாடு இருக்கும்;உலகின் மூத்த இனமான தமிழ் இனமே ஆன்மீகத்தின் ரிஷிமூலமாக இருந்துவருகிறது.எழுத்தில் சொல்ல முடியாத,இணையத்தில் எழுதமுடியாத ஏராளமான ரகசியங்கள் நமது முன்னோர்களிடம் இருக்கின்றன.நமது முன்னோர்களும் சரி,நாமும் சரி சித்தர்களின் வம்சாவழியினர் தான்!
சித்தர்களின் பரம்பரையில் நமக்காக வழிகாட்டி வருபவரே நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்.பல ஆன்மீக குருமார்கள் தமது பிரதான சீடர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பல ஆன்மீக ரகசியங்களை நமது நலன்களுக்காக வெளிப்படையாக தெரிவிப்பவர் நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்! 
15 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை( நூறு ஆண்டுகளுக்கு மூன்று தலைமுறை என்று கணக்கிட்டுக் கொண்டால்,1500 ஆண்டுகளை 45 தலைமுறைகளுக்கு ஒருமுறை என்று எடுத்துக் கொள்ளலாம்) முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் ஒன்றாக கிரிவலம் வருகிறார்கள் என்பது பல நூற்றாண்டுகளாக பலருக்குத் தெரியாத ரகசியம்!
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று கழுகுமலைக்கு முதன்மை சித்தர்களாகிய பதிணெண் சித்தர்களும் கிரிவலம் வருகிறார்கள்.அப்பேர்ப்பட்ட மகத்தான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனில் நமது பூர்வபுண்ணியம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்;
2011 மார்கழி மாத கிரிவலத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அவரவர் முன்னோர்களாகிய சித்தர் தரிசனம் கிரிவலம் செல்லும் போதே கிட்டியது.அவ்வாறு கிட்டியதால்,அடுத்த சில நாட்களில் அவர்களின் நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன;பலருக்கு நீண்டகால அதே சமயம் நியாயமான ஏக்கங்கள் நிறைவேறின.
2012 மார்கழி மாத கழுகுமலை கிரிவலத்தில் பாரத நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து 700 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டவர்களுக்கு கிடைத்த சித்தர்களின் ஆசியைப் பற்றி எழுத தனி வலைப்பூவே ஆரம்பிக்கலாம்;அவ்வளவு பலன்கள் கிட்டின;வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்தது;வேலையில் நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிட்டியது;தொழிலில் ஸ்திரமில்லாமல் கடனில் தவித்தவர்களுக்கு கடன்கள் தீர்ந்தன;மருத்துவ உலகிற்கே சவால் விடும் பல நோய்கள் தீர்ந்தன;30 ஆண்டுகாலமாக இருந்துவந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன;குழந்தை வரம் வேண்டி ஏங்கி தவித்தவர்கள் பலருக்கு சித்தர்பெருமக்களின் ஆசியால் குழந்தை கிடைத்தன;திருமணத் தடையால் மனம் வெதும்பிய பெற்றோர்கள் ஆழ்ந்த நிம்மதியை அடைந்தனர்;வராக் கடன்கள் வசூல் ஆகியது;இவையெல்லாம் சராசரி மனிதர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கான பின்னூட்டங்கள்!
ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பியவர்களுக்கு அவரவர்களின் ஆன்மீக படிநிலையைப் பொறுத்து முன்னேற்றங்கள் கிட்டின;பலர் தமதுமுன்னோர்களாகிய சித்தர்களால் ஸ்பரிச தீட்சை பெற்றனர்;சிலர் அன்று இரவு அல்லது மறு நாள் இரவு கனவில் தமது முற்பிறவி குருவாக இருந்த சித்தர்களிடம் பேசும் பாக்கியம் பெற்றனர்.இன்னும் சிலருக்கு தாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்? என்பதை உணர்ந்தார்கள்.
பல ஆண்டுகளாக தியானம் செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய முன்னேற்றத்தை அடைய முடியாமல் தவித்தார்கள்;அவர்களுக்கு இந்த கழுகுமலை கிரிவலம் முன்னேற்றத்தை அடைய உதவியது;
இந்த வருடம் 16.12.2013 திங்கட்கிழமையன்று 18 சித்தர்களும் ஒன்றாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்;நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சுமமான உலகத்தில் இருந்து வந்து நமக்கு ஆசி தர இருக்கிறார்கள்;
  வடக்கு தமிழ்நாட்டு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 15.12.2013 அன்றே கோவில்பட்டி அல்லது சங்கரன் கோவிலுக்கு வந்து தங்கிக் கொள்வது நன்று;கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் கிராமமே கழுகுமலை ஆகும்.

ரயில் மார்க்கமாக கோவில்பட்டி அல்லது சங்கரன்கோவில் வந்தடைய வேண்டும்;கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவிலுக்கும்,சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கும் நிமிடத்துக்கு ஒரு பேருந்து(டவுண் பஸ்ஸீம்,ரூட் பஸ்ஸீம்) பயணித்துக் கொண்டே இருக்கின்றன;பயண நேரம் அதிகபட்சமே 30 நிமிடங்கள் தான்!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்;ஒவ்வொருவரும்(குடும்பத்தோடு வருபவர்களுக்கு விதிவிலக்கு உண்டு;ஒரு குடும்பத்திற்கு ஒரு ஐந்து கிலோ நவதானியங்களும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டும் போதும்!)ஐந்துகிலோ நவதானியங்கள்(எல்லாம் கலந்தது),ஒருகிலோ டயமண்டு கல்கண்டு நமது ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு 2 மணிக்கே கழுகாச்சலமூர்த்தி கோவிலுக்கு வந்துவிடுவோம்;மதியம் சரியாக 3 மணிக்கு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தி ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலப் பாதை 3 கி.மீ.தூரமே! வழியில் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும்; கிரிவலம் நிறைவடைந்ததும்,ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்வோம்;நிகழ்ச்சிகள் அனைத்து மாலை 6 மணிக்கு நிறைவடைந்துவிடும்;புயல் காலமாக இருப்பதால்,மழை வரும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன;போதுமான முன்னேற்பாடுகளுடன் வருவது நல்லது.
பிறகு,வேறு எந்த ஊருக்கும் செல்லாமலும்,பிறரின் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்குத் திரும்புவோம்.
அடுத்த கழுகுமலை கிரிவலம் கி.பி.3511 ஆம் ஆண்டில் வருவதால்,(1500 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த அரிய வாய்ப்பை ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்வது நமது நிம்மதியான,வளமான வாழ்க்கைக்கு வழி!!! நன்றி  :  ஆன்மிகக்கடல் 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஓம் சிவ சிவ ஓம் ! வாழ்வில் முன்னேற விரும்பும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

 

தனது ஆன்மிகத் தன்மையினால் , பிரதி பலன் இன்றி சேவை ஆற்றி , பலரது வாழ்வில் விளக்கேற்றி வரும் , அய்யா திரு.சஹஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்தித்து , அதன் மூலம் தங்களது நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பும் அன்பர்கள் இந்த லிங்கை ( link) கிளிக் செய்யவும். 

வெள்ளி, 8 மார்ச், 2013

விருதுநகர் மாவட்டம் - செட்டிகுறிசசி விலக்கு ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது ஆலயம்


 200 ஆண்டுகள் பழமையான சமாது ஆலயம் 

விருதுநகர் மாவட்டம் , பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் , செட்டிகுறிச்சி விலக்கு ஆகும். இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாது ஆலயம் இது ஆகும்.








ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது 



பிரதான சாலையின் மேற்புறம் அமைந்துள்ள ஆலயம் இது. கர்பகிரகம் மட்டும் உள்ள ஆலயம். சிறு விமானம் அமைந்துள்ளது. ஆலயம் முகப்பில் ஸ்ரீ வீரபத்திர சாமி சமாது - வருடம் 1812 என்று செதுக்கப் பட்டு உள்ளது.


இந்த சுவாமி அருப்புக்கோட்டை நகரில் வாழ்ந்து இந்த இடத்தில் ஐக்கியம் அடைந்து இருப்பதாகக் கூறபடுகிறது. தினமும் இங்கே விளக்கு மட்டும் ஏற்றப் படுகிறது. 

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

800 ஆண்டுகள் பழமையான ராஜபாளையம் -சோழபுரம் - ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம்

ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் 


சோழபுரம் சிவாலய தோற்றம் (கீழே)



விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ள ஊர் சோழபுரம் ஆகும்.இங்கு முக்கிய சாலையின் மேல் புறம் அமைந்துள்ள சிவாலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள அம்பாள் சன்னதியின் அருகில் ஈசான்ய பாகத்திலே ஒரு லிங்கம் அமைந்தள்ளது. இதனை ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் எனக் கூறுகின்றனர். இவர் இங்கு ஐக்கியம் ஆகி 800 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது எனக் கூறுகின்றனர். 

வாழ்வாங்கி ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி





விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி to அருப்புகோட்டை சாலையில் உள்ள ஊர் வாழ்வாங்கி ஆகும். நான்கு வழி சாலையின் மேல்புறம் , பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி.
தற்போது பௌர்ணமி அன்று மாலை  சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு :
திரு.மணிகண்டன் : +91 9786397825
திரு.கமலேஷ் : +91 9677863132

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியிலும் , அதனை அடுத்து அமபாசமுத்திரத்திலும் அமைந்துள்ளது.


கருவறையில் மூலவராக ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி நின்ற திருகோலத்திலும் , தாயார் ஸ்ரீ லோபமுத்ரா தேவி தெற்கு நோக்கி தனி சந்நிதியிலும் அருள் மழை பொழிகிறார்கள் .

சித்தர் வழிபாடு செய்யும் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில்கள். நெல்லையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.  

செவ்வாய், 29 ஜனவரி, 2013

நித்திய பூஜை இன்றி காத்திருக்கும் v .நாங்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்










மதுரை  அருகே உள்ள காரியாப்பட்டி என்ற ஊரில்  இருந்து சுமார் 10 k .m . தொலைவில் அமைந்துள்ள் சிறிய கிராமம்தான் v . நாங்கூர் . இதன் முழு பெயர் வைரவன் நாங்கூர். ஸ்ரீ கால பைரவர் தனி ஸந்நிதி  கொண்டு கிழக்கு நோக்கி 6 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அற்புதமான ஸ்தலமாகும், இந்த பைரவரின் பெயரில்தான் இவ்வூர் வைரவன் நாங்கூர் என அழைக்கப்படுகிறது.

இதே ஊரில் , அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி சந்நிதி. ஆலயம் என்ற ஒன்று இருந்தது என நம்புவதே கஷ்டமாக இருக்கும் விதத்தில், கருவறை பீடம் மட்டுமே தற்போதுக்  காணப்படுகிறது.

தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தியவாறு , சங்கு - சக்கரம் தரித்து கிழக்கு நோக்கி வெட்ட வெளியில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.

அருகிலேயே ஸ்ரீ இராமானுஜர் மற்றைய ஆழ்வார்கள் சிலைகள் பின்னப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தினை பராமரித்து வந்த பூர்விக மக்கள் தற்போது இடம்பெயன்றுச் சென்றுவிட்டனர்.

கடந்த 19-01-2013 அன்று பக்தர்கள் ஒன்றிணைந்து , வெகு வருடங்களுக்குப் பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து,  அதி விரைவில் இவ்வாலயம் முழுமையாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று பெருமாளுக்கு நித்திய  பூஜைகள் நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

தற்காலிகமாக  ஆஷ்பெட்டாஷ்  கூரை ஒன்றை அமைக்க அவ்வூர் பஞ்சாயத்து தலைவர்  முயற்சி செய்து வருகிறார். இந்த இறை பணியில் ஈடுபட விரும்புபவர்கள்  "பக்தி யுகத்தையோ" அல்லது , நேரடியாக அவ்வூருக்குச் சென்றோ தங்களால் இயன்ற  உதவிகளைச் செய்யலாம். 

v .நாங்கூர் - ஸ்ரீ பைரவர்.




மதுரை - காரியப்பட்டி  அருகில் உள்ள v .நாங்கூர் - ல் அமைந்துள்ள 6 அடி உயரமுள்ள தனி சன்னதியோடு கிழக்கு நோக்கி அருள் புரியும் ஸ்ரீ பைரவர். 

வெள்ளி, 4 ஜனவரி, 2013

வைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ கால பைரவர்



அருப்புகோட்டை அருகே உள்ள ஊர்  காரியப்பட்டி. இதன் அருகே அமைந்துள்ள சிற்றூர்தான் V நாங்கூர் எனப்படும் வைரவன்  நாங்கூர்.இங்குள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கால பைரவர் ஆலயம். ஆறடி உயரம் உள்ள ஸ்ரீ காலபைரவர் கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இது பைரவருக்கான தனி ஆலயம் என்பது இதன் சிறப்பு ஆகும் . சுற்றிலும் பரிவார தேவதைகள் இருக்கிறார்கள்.

ஆதியில் இங்குள்ள குளத்தில் இந்த சிலை புதையுண்டு மறைந்து இருந்து இருக்கிறது.அவ்வூரில் வாசித்த ஒரு அந்தணரின் கனவில் தான் மருந்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளார்  ஸ்ரீ கால பைரவர்.குறிப்பிட்ட நான்கு சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் அந்த இடத்திற்க்குச் சென்று , பைரவரை எடுத்து இந்த குளத்தின் கரையிலே பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வந்துள்ளனர் . 

பிற்காலத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்று உள்ளது. 

தற்போது ஒருகால பூஜையும் தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தின் படங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பூசாரி தொடர்புக்கு : திரு.ரத்தினம் பூசாரி : +91 9786617880.
காரியாப்பட்டியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் டவுன் பஸ் உள்ளது.