செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012



இறைவனின் உதவி தோற்றத்திற்கு பெரியதாகத் தெரியாது, 
ஆனால் செயலில் ஆற்றலுடையதாக  இருக்கும். 
- ஸ்ரீ அன்னை 

புதன், 1 ஆகஸ்ட், 2012

கேமராவில் பதிவான கிரியா யோகா பாபாஜியின் பொன் ஒளி ரூபமான கால்



கேமராவில் பதிவான கிரியா யோகா  பாபாஜியின்  பொன் ஒளி ரூபமான    கால் 

மகா அவதார் பாபாஜி என்று உலகமெல்லாம் வணங்கப்பெறும் , பாபாஜி நம் தெய்வத் தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப் பேட்டையில் அவதாரம் செய்த மகான். இவர்தம் இயற்பெயர் நாகராஜன் என்பதாகும்.  இலங்கையிலும் பின்னர் நம் தமிழ்நாட்டு திருக்குற்றால மலையிலும் தனது குருமார்களால் தீட்சையும் உபதேசமும் பெறப்பெற்று , பின்னர் இமாலயத்தில் பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்து உயர் ஞானானுபவம் பெற்றவர். 

கிரியா யோகம் எனும் ,மிக உயர்ந்த மார்க்கத்தினை  உலகெங்கும்  பரப்பிட சீடர்களை தேர்ந்தெடுத்து , அவர்களை உயர் குருமார்களாக உருவாக்கி உலகிற்கு அளித்தவர். ஸ்ரீ மகாசயர் ,  ஸ்ரீ யுக்தேஸ்வரர் மற்றும் பரமஹம்ச ஸ்ரீ யோகானந்தர் ஆகியோர் பாபாஜி வழியினில் கிரியா யோகம் எனும் உயர் யோக மார்க்கத்தினை உலகினில் நன்கு வேரூன்ற செய்துள்ளார்கள். 

நம் தமிழ் நாட்டில் ஸ்ரீ.வி.டி.நீலகண்டன் , ஸ்ரீ எஸ்.ஏ.ஏ. ராமையா ஆகிய மகான்கள் கிரியா யோக மார்க்கத்தினை   வேரூன்றச் செய்யும் பணியினைச் செய்துள்ளார்கள். 

இன்றளவும் இமய மலையில் பாபாஜி வாழ்ந்து வருவதாகவும் , தன்னை உண்மையினில் நாடி வருபவர்களுக்கு தன்னையே தருவதாகவும் நாம் கூறக் கேட்டு உள்ளோம்.  இது உண்மைதானா ? பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் வாழுவது சாத்தியமா ? இவை கட்டு கதைகளாக இருக்கும் , என எண்ணுபவர்களும் வாதிடுபவர்களும் உண்டு. 

ஆனால்  சத்தியத்தை ஸ்பரிசித்தவர்களுக்கே அந்த உண்மை புரியும். இன்றளவும் பாபாஜி இருக்கிறார் என்பதற்கு சாட்சியம் அளிக்கும் விதமாக அண்மையினில் ஒரு அதிசயத்தினை பாபாஜி தன் பக்தர் ஒருவர் மூலம் நிகழ்த்திக் காட்டி உள்ளார்கள்.

சென்னை பூவிருந்தவல்லி ( பூந்தமல்லி) யில் வசித்து வருபவர் திரு.பிரம்மன் குமார் அவர்கள். தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், வாழ்விலே பல்வேறு தளங்களில் பயணித்து , இறுதியில் இறைவன் மட்டுமே உண்மை , அவனை பற்றிகொள்வது மட்டுமே தன் வாழ்வின் நோக்கம் என்பதனை புரிந்துக் கொண்டு , இறைவனை தேடும் விதமாக தனது வாழ்க்கை பாணியினை மாற்றிக் கொண்டார்கள். 
தனது உலகியல் தேவைகளை   , இறைவன் அவருக்கு அருளிய ஜோதிட ஸாஸ்த்திரத்தின் மூலம் பூர்த்தி செய்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வரும் இல்லற யோகியாக வாழ்ந்து வருகிறார்கள். 

கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அவர் தங்கி இருந்த சமயம் , ஒரு இரவினில் பாபஜியினால் இவர் ஆட்கொள்ளப் பட்டார். தன்னை ஆட்கொண்டது பாபாஜிதான் என்பதை கூட அறியாது, ஆட்கொண்டது  யார் என அவர் தேடத் துவங்கினார். அப்போதுதான் அவர் பாபாஜியை யார் என அறியத் தொடங்கி, பாபாஜி குறித்து  மேலும் மேலும் அறிந்துக் கொள்ளத் தலைப் பட்டார். 

பாபாஜி குறித்து புத்தங்கள் மூலம் அறிந்துக் கொள்வதை விட , தனது குருவினைக் குறித்த விவரங்களை , அவர் அருளாலேயே அறிந்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அவர், இமய மலைக்கு பயணப்பட்டார். அங்கே அவருக்கு பல அனுபவங்களை பாபாஜி அருளினார்கள். தொடர்ந்து வருடம்தோறும் இவரது இமய மலை பயணம் தொடர்ந்தது. 

இந்தவருடம் , ஜூலை மாதம் அவரது பயணம் இமயமலையை நோக்கி அமைந்தது. செல்லும் பொழுது தனது குருநாதரான கிரியா பாபாஜிக்கு மானசிகமாக சமர்ப்பிக்கும் நோக்கோடு , பாதுகைகளை செய்து எடுத்துக் கொண்டு சென்று , பாபாஜியின் குகையினில் வைத்து, அதன் sமேல் பாபாஜியின் சிறிய போட்டோ ஒன்றை வைத்து  அந்த பாதுகைகளுக்கு பூஜை செய்து வழிபாடுகளை செய்துள்ளார். அப்போது , அந்த குகையினில் வேறு யாரும் இல்லை. இவரும் இவரது நண்பர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்கள்.

தாங்கள் செய்யும் பூஜையின் ஞாபகமாக அங்கே சில புகை படங்களை எடுத்துக் கொண்டு , சென்னை திரும்பி உள்ளார்கள். சென்னையில் பிலிமை டெவெலப் செய்து பார்த்த அவர் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவர் பாத பூஜை செய்த    பாதுகை போட்டோவில் , பாபாஜி யின் தங்க நிற கால் ஒன்று , முழங்காலில் இருந்து கணுக்கால் வரை பதிவாகி இருந்ததை கண்டு  ஆச்சர்யம் அடைந்தார். சில புகை  படங்களில்  , பாபாஜியின் படத்தினில்     முகத்தினில்  ஒளி ரூபமாகவும் ஒரு படத்தில்  முகம்       நாக ரூபமாகவும் காணப்படுகிறது.  

தான் பெற்ற அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கோடு , அந்த புகைப்படத்தை நமக்கு கொடுத்து இன்டெர் நெட்டில் வெளியிடச் சொன்னார்கள். நாமும் இந்த அதிசய படத்தினை பக்தி யுகத்தில் வெளியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறோம். 

திரு.பிரம்மன் குமார் சுவாமி
ஸ்ரீ அகத்தியர் ஜோதிட நிலையம் 
பூந்தமல்லி
சென்னை
+91  9444257917  



புதன், 25 ஜூலை, 2012

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி






வெட்டவெளியினை தியானித்து சித்தி பெற்றவர் ஸ்ரீ கடுவெளி சித்தர்.அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலே , ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருகோவிலில் இருந்து சிறிது தொலைவிலே , இஸ்லாமிய மக்கள் மிகுந்து வாழக் கூடிய பகுதியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
முற்காலத்திலே இந்த இடத்திலே பெரிய சிவாலயமும், இந்த ஜீவ சமாதியைச் சுற்றி , மேலும் பல சமாதிகளும் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்த ஆலயம் முற்றிலும் அழிக்கப் பட்டு, பிற சமாதிகளும் அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த கடுவெளி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள சிவ லிங்கத்தினை மட்டும்,யானையைக் கொண்டு இழுத்தும் அசைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். நீண்ட  கால போராட்டங்களுக்குப் பிறகு, இன்று இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி சிறிய அளவிலே இடத்தை மீண்டும் கையகப்படுத்தி, முள் வேலி அமைத்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள்.


வெட்டவெளியினை தியானித்து சித்தியானதால்தான்  இன்று   கடுவெளி சித்தரின் ஜீவ சமாதி கூட இன்று வெட்ட வெளியிலேயே  இருக்கிறதோ ?  அந்த ஈசனே அறிவார். 



ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி








சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில்  உள்ள ஸ்ரீ வைதீஸ்வரன் கோவில் அருகே  ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒரு காம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள். 

வல்லப சக்தியோடு கூடியதான விநாயகர் திருக்கோலம் முதலில் அமைந்துள்ளது.அதனை அடுத்து அமைந்துள்ள அறையில் ஸ்ரீ பைரவ சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகவும் சக்திபடைத்ததாக அமைந்துள்ளது. பைரவ உபாசனை செய்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 

செவ்வாய், 24 ஜூலை, 2012

தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்


( திருப்பட்டூர் பிரம்மா )


பக்தி யுகத்தின் அன்பிற்கினிய நெஞ்சங்களுக்கு  பணிவான வணக்கங்கள். வேலை பளுவின் காரணமாக , நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பதிவினை சமர்ப்பிகின்றேன். நன்றி. 

திருச்சியை அடுத்து உள்ள திருப்பட்டூரில்  அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீ பிரம்மா தனி சந்நிதிக்  கொண்டு அருள் புரிகிறார். அந்த ஆலயத்திற்குச் சென்று , தமது ஜாதகத்தினை பிரம்மாவின் பாதத்திலே வைத்து வணங்குவோருக்கு , அந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் , தீய அமைப்புகளும் மாறி நற்பலன் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம். நம் தலையெழுத்தையே அங்கு உள்ள பிரம்மா மாற்றி அமைத்து விடுகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. 

அந்த ஆலயத்திற்குச் சென்று பயன் அடைந்த திருச்சியைச் சார்ந்த திரு.சிவகுமார் என்பவரது அனுபவத்தினை இங்கே காணலாம். 


செவ்வாய், 12 ஜூன், 2012

தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்


வாழ்க்கையில் பல்வேறு வகையான தான தருமங்களை செய்து வாழவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சில தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
வஸ்திரதானம் – ஆயுள் விருத்தி.
பூமி தானம் – பிரம்மலோகத்தை தரும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம்.
நெல்லிக்காய் தானம் – ஞானம்.
அரிசி தானம் – பயம் போக்கும்.
விதை வித்துகள் தானம் – ஆயுள், சந்ததி விருத்தி.
தாம்பூல தானம் – சொர்க்கத்தை தரும்.
அன்னதானம் – நினைத்தது கிடைக்கும்.

நன்றி :  http://senthilvayal.wordpress.com

திங்கள், 11 ஜூன், 2012

கோமத்யம்பாஷ்டகம் - II


 ஸ்ரீ குருப்யோ நம :

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் சிஷ்யரான 
ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் 
இயற்றிய 

கோமத்யம்பாஷ்டகம் 

முகுரஸமகபோலே பக்தசித்தானுகூலே 
வின்மதமாஜாலே விஷ்டபாராதிகாலே !
விரசிதசிவலீலே வல்லகீநாதலோலே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (1)

புவனஜனனி மாயே பார்வதீநாமதேயே 
த்ருதஸுகுணநிகாயே திவ்யஸௌந்தாயகாயே ! 
ஸகலவிபுதகேய மன்மனோபாகதேயே 
ஹிமகிரிவரபாலே  கோமதி த்ராஹிபாலே !! (2) 

கதன ஹரகடாக்ஷே லோகரக்ஷாவிதக்ஷே 
கலிதவிநதரக்ஷே  கல்பிதாராதிசிக்ஷே ! 
ப்ரமுதிதவீ க்ஷமாக்ஷே பக்த ஸந்தத்தமோக்ஷே
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (3)

ஸகலநிகமருபே ஹஸ்தவின்யஸ்தசாபே 
ப்ரமதிதபவதாபே சுத்ததத்வஸ்ரூபே !
மதிதஸகலபாபே தைத்யவின்யஸ்தகோபே 
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (4)

மரகதமணிஹாரே ஸல்லஸத்சே சபாரே
சமிததநுகுமாரே  யுத்தஸன்னாஹதீரே !
துரிததருகுடாரே துஷ்டஸந்தோஹகோரே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (5)

ப்ருதுலதரநிதம்பே பாஸமானோஷ்டபிம்பே 
சரிதருசிரகதம்பே சந்தரதுல்யாஸ்யபிம்பே !
ஸுசரிதநிகுரும்பே சூலவித்வஸ்தசும்பே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (6)

சுகசிசுகலபாஷே சோபிமுக்தாவிபூஷே
விரசிதரிபுரோஷே பத்ரகாள்யாதிவேஷே !
சசதரதரயோஷே மத்ஸ்யபக்வாபிலாஷே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (7)

நிகிலபயகபூத ப்ரேதபைசாசஜாதா: 
ஜ்வரபயவிஷவாத க்ருரயுத்ஸன்னிபாதா !
அதிசமனஸமேதா யத்கடாக்ஷாத்ப்ரபீதா :
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (8)

- சுபம்-