செவ்வாய், 29 ஜனவரி, 2013

நித்திய பூஜை இன்றி காத்திருக்கும் v .நாங்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்










மதுரை  அருகே உள்ள காரியாப்பட்டி என்ற ஊரில்  இருந்து சுமார் 10 k .m . தொலைவில் அமைந்துள்ள் சிறிய கிராமம்தான் v . நாங்கூர் . இதன் முழு பெயர் வைரவன் நாங்கூர். ஸ்ரீ கால பைரவர் தனி ஸந்நிதி  கொண்டு கிழக்கு நோக்கி 6 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அற்புதமான ஸ்தலமாகும், இந்த பைரவரின் பெயரில்தான் இவ்வூர் வைரவன் நாங்கூர் என அழைக்கப்படுகிறது.

இதே ஊரில் , அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி சந்நிதி. ஆலயம் என்ற ஒன்று இருந்தது என நம்புவதே கஷ்டமாக இருக்கும் விதத்தில், கருவறை பீடம் மட்டுமே தற்போதுக்  காணப்படுகிறது.

தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தியவாறு , சங்கு - சக்கரம் தரித்து கிழக்கு நோக்கி வெட்ட வெளியில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.

அருகிலேயே ஸ்ரீ இராமானுஜர் மற்றைய ஆழ்வார்கள் சிலைகள் பின்னப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தினை பராமரித்து வந்த பூர்விக மக்கள் தற்போது இடம்பெயன்றுச் சென்றுவிட்டனர்.

கடந்த 19-01-2013 அன்று பக்தர்கள் ஒன்றிணைந்து , வெகு வருடங்களுக்குப் பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து,  அதி விரைவில் இவ்வாலயம் முழுமையாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று பெருமாளுக்கு நித்திய  பூஜைகள் நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

தற்காலிகமாக  ஆஷ்பெட்டாஷ்  கூரை ஒன்றை அமைக்க அவ்வூர் பஞ்சாயத்து தலைவர்  முயற்சி செய்து வருகிறார். இந்த இறை பணியில் ஈடுபட விரும்புபவர்கள்  "பக்தி யுகத்தையோ" அல்லது , நேரடியாக அவ்வூருக்குச் சென்றோ தங்களால் இயன்ற  உதவிகளைச் செய்யலாம். 

v .நாங்கூர் - ஸ்ரீ பைரவர்.




மதுரை - காரியப்பட்டி  அருகில் உள்ள v .நாங்கூர் - ல் அமைந்துள்ள 6 அடி உயரமுள்ள தனி சன்னதியோடு கிழக்கு நோக்கி அருள் புரியும் ஸ்ரீ பைரவர். 

வெள்ளி, 4 ஜனவரி, 2013

வைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ கால பைரவர்



அருப்புகோட்டை அருகே உள்ள ஊர்  காரியப்பட்டி. இதன் அருகே அமைந்துள்ள சிற்றூர்தான் V நாங்கூர் எனப்படும் வைரவன்  நாங்கூர்.இங்குள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கால பைரவர் ஆலயம். ஆறடி உயரம் உள்ள ஸ்ரீ காலபைரவர் கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இது பைரவருக்கான தனி ஆலயம் என்பது இதன் சிறப்பு ஆகும் . சுற்றிலும் பரிவார தேவதைகள் இருக்கிறார்கள்.

ஆதியில் இங்குள்ள குளத்தில் இந்த சிலை புதையுண்டு மறைந்து இருந்து இருக்கிறது.அவ்வூரில் வாசித்த ஒரு அந்தணரின் கனவில் தான் மருந்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளார்  ஸ்ரீ கால பைரவர்.குறிப்பிட்ட நான்கு சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் அந்த இடத்திற்க்குச் சென்று , பைரவரை எடுத்து இந்த குளத்தின் கரையிலே பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வந்துள்ளனர் . 

பிற்காலத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்று உள்ளது. 

தற்போது ஒருகால பூஜையும் தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தின் படங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பூசாரி தொடர்புக்கு : திரு.ரத்தினம் பூசாரி : +91 9786617880.
காரியாப்பட்டியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் டவுன் பஸ் உள்ளது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

யாரோ இவர் யாரோ ?



முருகபெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகளில் , முக்கியமானதான திருச்செந்தூரில் , கடற்கரயில் அமைந்துள்ள மூவர் சமாதியின் அருகிலே காணப்படும் இவர், யாரிடமும் பேசுவதில்லை , யாரவது ஏதாவது உண்ணக்  கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார். எப்போதும் ஆழ்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம்.

யாரோ இவர் யாரோ ? 

க்ளிக் செய்து பாருங்கள் ...

மஹா அவதார் பாபாஜியின் அவதார திருநாள் பூஜை


மஹா அவதார் பாபாஜியின் அவதாரத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது . சென்னை பூந்தமல்லியில் நாளை புதன் மாலை 6 மணி அளவில் பாபாஜி  குரு பூஜை நடைபெறுகிறது.
தொடர்புக்கு :
ஸ்ரீ பிரம்மன்  சுவாமி 
பிள்ளையார் கோவில் தெரு ,பூந்தமல்லி , சென்னை 
+91 94 44 25 79 17

 

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி

விருதுநகர் மாவட்டம் , திருச்சுழியில் அமைந்துள்ளது அருள்மிகு பூமிநாத  சுவாமி திருக்கோவில் . இந்த கோவிலைச் சுற்றி உள்ள 8  கிராமங்களில்  இறைவன் அஷ்ட லிங்க அமைப்பினில் அமைந்துள்ளார்.

அவற்றில்  ஒருவர்தாம் பாறைகுளம்  எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி . சிறிய குன்றினில் குடைவரைக் கோவிலாக  அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய  ஸந்நிதி.  சிறிய நந்தி தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . பரிவார தேவதைகளும்  புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.சில மரங்கள் நிழல் தருகின்றன. புதிய மரங்களும் நடப் பட்டு வருகின்றன.

ஆள் அரவம் இல்லா , இடத்தினில் ஏகாந்தமாக  இறைவன் அமர்ந்துள்ளார். பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி நாட்களில் மக்கள் இங்கு கூடி வழிபாடு செய்கிறார்கள்.அமாவசை நாட்களில் அன்னதானமும் நடைபெறுகின்றது..

தினசரி பூஜைகளும் எளிமையாக நிகழ்கின்றன.தொடர்புக்கு : திரு.முத்துராமலிங்கம் :+91 8883537031. முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்வது சிறந்தது.









குடைவரை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.




ஆலய மணி

 பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி


இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி. (மேலே)






இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி. 

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்





ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் /
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (1)

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் /
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (2)
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (3)
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (4)
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் /
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (5)
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே /
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (6)
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா /
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (7)
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் /
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (8)
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: /
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி //