செவ்வாய், 27 நவம்பர், 2012

யாரோ இவர் யாரோ ?



முருகபெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகளில் , முக்கியமானதான திருச்செந்தூரில் , கடற்கரயில் அமைந்துள்ள மூவர் சமாதியின் அருகிலே காணப்படும் இவர், யாரிடமும் பேசுவதில்லை , யாரவது ஏதாவது உண்ணக்  கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார். எப்போதும் ஆழ்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம்.

யாரோ இவர் யாரோ ? 

க்ளிக் செய்து பாருங்கள் ...

மஹா அவதார் பாபாஜியின் அவதார திருநாள் பூஜை


மஹா அவதார் பாபாஜியின் அவதாரத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது . சென்னை பூந்தமல்லியில் நாளை புதன் மாலை 6 மணி அளவில் பாபாஜி  குரு பூஜை நடைபெறுகிறது.
தொடர்புக்கு :
ஸ்ரீ பிரம்மன்  சுவாமி 
பிள்ளையார் கோவில் தெரு ,பூந்தமல்லி , சென்னை 
+91 94 44 25 79 17

 

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி

விருதுநகர் மாவட்டம் , திருச்சுழியில் அமைந்துள்ளது அருள்மிகு பூமிநாத  சுவாமி திருக்கோவில் . இந்த கோவிலைச் சுற்றி உள்ள 8  கிராமங்களில்  இறைவன் அஷ்ட லிங்க அமைப்பினில் அமைந்துள்ளார்.

அவற்றில்  ஒருவர்தாம் பாறைகுளம்  எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி . சிறிய குன்றினில் குடைவரைக் கோவிலாக  அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய  ஸந்நிதி.  சிறிய நந்தி தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . பரிவார தேவதைகளும்  புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.சில மரங்கள் நிழல் தருகின்றன. புதிய மரங்களும் நடப் பட்டு வருகின்றன.

ஆள் அரவம் இல்லா , இடத்தினில் ஏகாந்தமாக  இறைவன் அமர்ந்துள்ளார். பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி நாட்களில் மக்கள் இங்கு கூடி வழிபாடு செய்கிறார்கள்.அமாவசை நாட்களில் அன்னதானமும் நடைபெறுகின்றது..

தினசரி பூஜைகளும் எளிமையாக நிகழ்கின்றன.தொடர்புக்கு : திரு.முத்துராமலிங்கம் :+91 8883537031. முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்வது சிறந்தது.









குடைவரை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.




ஆலய மணி

 பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி


இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி. (மேலே)






இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி. 

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்





ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் /
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (1)

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் /
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (2)
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (3)
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (4)
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் /
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (5)
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே /
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (6)
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா /
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (7)
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் /
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் // (8)
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: /
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி //

திங்கள், 17 செப்டம்பர், 2012

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை






 குழந்தை பேறு கிடைக்க சொல்ல வேண்டிய  

சௌந்தர்யலஹரி  சுலோகம்  

சதுர்பி ஸ்ரீகண்டை :  சிவ யுவதிபி:  பஞ்சபிரபி
ப்ரபின்னாபி:சம்போர -    நவபிரபி மூல பிரக்ரிதிபி:
சதுசத்வா ரிம்சத் -வசுதல கலாசர - த்ரிவலய-
த்ரிரேகாபி  சார்த்தம்  தவ  சரண கோணத்  பரினத்:

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் இயற்றிய சகலகலாவல்லி மாலை


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

சனி, 8 செப்டம்பர், 2012

சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி




 ( சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி  )

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அமைந்திருக்கும் சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி கும்பாபிஷேகத்திற்குப்   பிறகு, புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. நான்கு தூண்களோடு அமிந்துள்ள வெளி மண்டபத்தினை அடுத்து , அர்த்த மண்டபம் உள்ளது. இதில் பலி பீடமும் , நந்தியும் அமைந்துள்ளன. அடுத்து கருங்கல்லால் அமைக்கப் பத்துல்ல கருவறையில், ஜீவ சமாதி அமைந்துள்ளது. சிறிய மதிலுடன் கூடிய வெளி சுற்று உள்ளது.



(  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் )
 இந்த ஆலயத்தில் ஈசான்ய மூலையில், மேற்கு நோக்கிய வாறு அருள்கிறார் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி. இவருக்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் அதி காலையில் 3 மணி அளவில் தொடங்கி, யாகங்களும் பூஜைகளும்    நடைப் பெறுகின்றன. 

சித்தர்களால் பூஜிக்கப்பட்டதாகக் கருதப்படும் படித்துறை விநாயகர்




அருப்புகோட்டை நகர்  முற்காலத்தில் , வில்வ மரங்கள் நிறைந்த வில்வ வனமாக இருந்துள்ளது. இங்குள்ள மீனாக்ஷி அம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம், பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னனுக்கு ஒரு சாபத்தினால், உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டு, அந்த சாப நிவர்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக் குளத்தினை வெட்டினான்.

அவ்வாறு அந்த திருக்குளம் வெட்டும் காலத்திலே , அந்த இடத்திலே புதையுண்டுக் கிடந்த , அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன்  தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். 
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக் குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள ஆஸ்திக அன்பர்களால் , இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப் பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் முறையாக நடைப் பெற்று வருகின்றன. 

இந்த ஆலய வடிவமைப்பு , சென்னை திரு.கணபதி ஸ்தபதியினால் செய்யப்பட்டு உள்ளது. ஆலயம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 

அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு இவர் ஒரு வரப்ரசாதி என்பது அனுபவ உண்மை. 



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.  
 
- இந்த கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும்  பெறலாம்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின் பெருமைகளையும், வாழ்க்கை குறிப்புகளையும் , நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார், தற்சமயம் சுவாமிகளின் ஜீவசமாதியினை பராமரித்துவரும் முதியவர்.
வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யுங்கள் 
kalugumalai sri subramaniya swami's life history

வியாழன், 6 செப்டம்பர், 2012

காஞ்சி மஹாபெரியவாளின் ஜாதகம்

நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மஹாபெரியவாளின்  ஜாதகம். இதனை டவுன்லோட் செய்து நமது பூஜை அறையில் வைத்துக் கொள்வோம். 




நன்றி .
ttp://srisrisrimahaperiyaval-meelaadimai.blogspot.in/
 கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின் புகைப்படம் 

கழுகுமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஜீவ சமாதி


கழுகுமலையில் கிரிவல பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மிளகாய் பழ சித்தர்  ஜீவ சமாதிக்கு அருகில் அமைந்திருக்கிறது ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின்  ஜீவ சமாதி. இதனை தற்சமயம் பராமரித்து, வருகிறார் முதியவர் ஒருவர். அவர் கழுகுமலை முருகன் கோவிலிலேயே தங்கி இருக்கிறார்.  








செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012



இறைவனின் உதவி தோற்றத்திற்கு பெரியதாகத் தெரியாது, 
ஆனால் செயலில் ஆற்றலுடையதாக  இருக்கும். 
- ஸ்ரீ அன்னை 

புதன், 1 ஆகஸ்ட், 2012

கேமராவில் பதிவான கிரியா யோகா பாபாஜியின் பொன் ஒளி ரூபமான கால்



கேமராவில் பதிவான கிரியா யோகா  பாபாஜியின்  பொன் ஒளி ரூபமான    கால் 

மகா அவதார் பாபாஜி என்று உலகமெல்லாம் வணங்கப்பெறும் , பாபாஜி நம் தெய்வத் தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப் பேட்டையில் அவதாரம் செய்த மகான். இவர்தம் இயற்பெயர் நாகராஜன் என்பதாகும்.  இலங்கையிலும் பின்னர் நம் தமிழ்நாட்டு திருக்குற்றால மலையிலும் தனது குருமார்களால் தீட்சையும் உபதேசமும் பெறப்பெற்று , பின்னர் இமாலயத்தில் பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்து உயர் ஞானானுபவம் பெற்றவர். 

கிரியா யோகம் எனும் ,மிக உயர்ந்த மார்க்கத்தினை  உலகெங்கும்  பரப்பிட சீடர்களை தேர்ந்தெடுத்து , அவர்களை உயர் குருமார்களாக உருவாக்கி உலகிற்கு அளித்தவர். ஸ்ரீ மகாசயர் ,  ஸ்ரீ யுக்தேஸ்வரர் மற்றும் பரமஹம்ச ஸ்ரீ யோகானந்தர் ஆகியோர் பாபாஜி வழியினில் கிரியா யோகம் எனும் உயர் யோக மார்க்கத்தினை உலகினில் நன்கு வேரூன்ற செய்துள்ளார்கள். 

நம் தமிழ் நாட்டில் ஸ்ரீ.வி.டி.நீலகண்டன் , ஸ்ரீ எஸ்.ஏ.ஏ. ராமையா ஆகிய மகான்கள் கிரியா யோக மார்க்கத்தினை   வேரூன்றச் செய்யும் பணியினைச் செய்துள்ளார்கள். 

இன்றளவும் இமய மலையில் பாபாஜி வாழ்ந்து வருவதாகவும் , தன்னை உண்மையினில் நாடி வருபவர்களுக்கு தன்னையே தருவதாகவும் நாம் கூறக் கேட்டு உள்ளோம்.  இது உண்மைதானா ? பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் வாழுவது சாத்தியமா ? இவை கட்டு கதைகளாக இருக்கும் , என எண்ணுபவர்களும் வாதிடுபவர்களும் உண்டு. 

ஆனால்  சத்தியத்தை ஸ்பரிசித்தவர்களுக்கே அந்த உண்மை புரியும். இன்றளவும் பாபாஜி இருக்கிறார் என்பதற்கு சாட்சியம் அளிக்கும் விதமாக அண்மையினில் ஒரு அதிசயத்தினை பாபாஜி தன் பக்தர் ஒருவர் மூலம் நிகழ்த்திக் காட்டி உள்ளார்கள்.

சென்னை பூவிருந்தவல்லி ( பூந்தமல்லி) யில் வசித்து வருபவர் திரு.பிரம்மன் குமார் அவர்கள். தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், வாழ்விலே பல்வேறு தளங்களில் பயணித்து , இறுதியில் இறைவன் மட்டுமே உண்மை , அவனை பற்றிகொள்வது மட்டுமே தன் வாழ்வின் நோக்கம் என்பதனை புரிந்துக் கொண்டு , இறைவனை தேடும் விதமாக தனது வாழ்க்கை பாணியினை மாற்றிக் கொண்டார்கள். 
தனது உலகியல் தேவைகளை   , இறைவன் அவருக்கு அருளிய ஜோதிட ஸாஸ்த்திரத்தின் மூலம் பூர்த்தி செய்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வரும் இல்லற யோகியாக வாழ்ந்து வருகிறார்கள். 

கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அவர் தங்கி இருந்த சமயம் , ஒரு இரவினில் பாபஜியினால் இவர் ஆட்கொள்ளப் பட்டார். தன்னை ஆட்கொண்டது பாபாஜிதான் என்பதை கூட அறியாது, ஆட்கொண்டது  யார் என அவர் தேடத் துவங்கினார். அப்போதுதான் அவர் பாபாஜியை யார் என அறியத் தொடங்கி, பாபாஜி குறித்து  மேலும் மேலும் அறிந்துக் கொள்ளத் தலைப் பட்டார். 

பாபாஜி குறித்து புத்தங்கள் மூலம் அறிந்துக் கொள்வதை விட , தனது குருவினைக் குறித்த விவரங்களை , அவர் அருளாலேயே அறிந்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அவர், இமய மலைக்கு பயணப்பட்டார். அங்கே அவருக்கு பல அனுபவங்களை பாபாஜி அருளினார்கள். தொடர்ந்து வருடம்தோறும் இவரது இமய மலை பயணம் தொடர்ந்தது. 

இந்தவருடம் , ஜூலை மாதம் அவரது பயணம் இமயமலையை நோக்கி அமைந்தது. செல்லும் பொழுது தனது குருநாதரான கிரியா பாபாஜிக்கு மானசிகமாக சமர்ப்பிக்கும் நோக்கோடு , பாதுகைகளை செய்து எடுத்துக் கொண்டு சென்று , பாபாஜியின் குகையினில் வைத்து, அதன் sமேல் பாபாஜியின் சிறிய போட்டோ ஒன்றை வைத்து  அந்த பாதுகைகளுக்கு பூஜை செய்து வழிபாடுகளை செய்துள்ளார். அப்போது , அந்த குகையினில் வேறு யாரும் இல்லை. இவரும் இவரது நண்பர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்கள்.

தாங்கள் செய்யும் பூஜையின் ஞாபகமாக அங்கே சில புகை படங்களை எடுத்துக் கொண்டு , சென்னை திரும்பி உள்ளார்கள். சென்னையில் பிலிமை டெவெலப் செய்து பார்த்த அவர் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவர் பாத பூஜை செய்    பாதுகை போட்டோவில் , பாபாஜி யின் தங்க நிற கால் ஒன்று , முழங்காலில் இருந்து கணுக்கால் வரை பதிவாகி இருந்ததை கண்டு  ஆச்சர்யம் அடைந்தார். சில புகை  படங்களில்  , பாபாஜியின் படத்தினில்     முகத்தினில்  ஒளி ரூபமாகவும் ஒரு படத்தில்  முகம்       நாக ரூபமாகவும் காணப்படுகிறது.  

தான் பெற்ற அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கோடு , அந்த புகைப்படத்தை நமக்கு கொடுத்து இன்டெர் நெட்டில் வெளியிடச் சொன்னார்கள். நாமும் இந்த அதிசய படத்தினை பக்தி யுகத்தில் வெளியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறோம். 

திரு.பிரம்மன் குமார் சுவாமி
ஸ்ரீ அகத்தியர் ஜோதிட நிலையம் 
பூந்தமல்லி
சென்னை
+91  9444257917  



புதன், 25 ஜூலை, 2012

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி






வெட்டவெளியினை தியானித்து சித்தி பெற்றவர் ஸ்ரீ கடுவெளி சித்தர்.அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலே , ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருகோவிலில் இருந்து சிறிது தொலைவிலே , இஸ்லாமிய மக்கள் மிகுந்து வாழக் கூடிய பகுதியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
முற்காலத்திலே இந்த இடத்திலே பெரிய சிவாலயமும், இந்த ஜீவ சமாதியைச் சுற்றி , மேலும் பல சமாதிகளும் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்த ஆலயம் முற்றிலும் அழிக்கப் பட்டு, பிற சமாதிகளும் அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த கடுவெளி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள சிவ லிங்கத்தினை மட்டும்,யானையைக் கொண்டு இழுத்தும் அசைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். நீண்ட  கால போராட்டங்களுக்குப் பிறகு, இன்று இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி சிறிய அளவிலே இடத்தை மீண்டும் கையகப்படுத்தி, முள் வேலி அமைத்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள்.


வெட்டவெளியினை தியானித்து சித்தியானதால்தான்  இன்று   கடுவெளி சித்தரின் ஜீவ சமாதி கூட இன்று வெட்ட வெளியிலேயே  இருக்கிறதோ ?  அந்த ஈசனே அறிவார். 



ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி








சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில்  உள்ள ஸ்ரீ வைதீஸ்வரன் கோவில் அருகே  ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒரு காம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள். 

வல்லப சக்தியோடு கூடியதான விநாயகர் திருக்கோலம் முதலில் அமைந்துள்ளது.அதனை அடுத்து அமைந்துள்ள அறையில் ஸ்ரீ பைரவ சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகவும் சக்திபடைத்ததாக அமைந்துள்ளது. பைரவ உபாசனை செய்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 

செவ்வாய், 24 ஜூலை, 2012

தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்


( திருப்பட்டூர் பிரம்மா )


பக்தி யுகத்தின் அன்பிற்கினிய நெஞ்சங்களுக்கு  பணிவான வணக்கங்கள். வேலை பளுவின் காரணமாக , நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பதிவினை சமர்ப்பிகின்றேன். நன்றி. 

திருச்சியை அடுத்து உள்ள திருப்பட்டூரில்  அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீ பிரம்மா தனி சந்நிதிக்  கொண்டு அருள் புரிகிறார். அந்த ஆலயத்திற்குச் சென்று , தமது ஜாதகத்தினை பிரம்மாவின் பாதத்திலே வைத்து வணங்குவோருக்கு , அந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் , தீய அமைப்புகளும் மாறி நற்பலன் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம். நம் தலையெழுத்தையே அங்கு உள்ள பிரம்மா மாற்றி அமைத்து விடுகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. 

அந்த ஆலயத்திற்குச் சென்று பயன் அடைந்த திருச்சியைச் சார்ந்த திரு.சிவகுமார் என்பவரது அனுபவத்தினை இங்கே காணலாம். 


செவ்வாய், 12 ஜூன், 2012

தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்


வாழ்க்கையில் பல்வேறு வகையான தான தருமங்களை செய்து வாழவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சில தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
வஸ்திரதானம் – ஆயுள் விருத்தி.
பூமி தானம் – பிரம்மலோகத்தை தரும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம்.
நெல்லிக்காய் தானம் – ஞானம்.
அரிசி தானம் – பயம் போக்கும்.
விதை வித்துகள் தானம் – ஆயுள், சந்ததி விருத்தி.
தாம்பூல தானம் – சொர்க்கத்தை தரும்.
அன்னதானம் – நினைத்தது கிடைக்கும்.

நன்றி :  http://senthilvayal.wordpress.com

திங்கள், 11 ஜூன், 2012

கோமத்யம்பாஷ்டகம் - II


 ஸ்ரீ குருப்யோ நம :

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் சிஷ்யரான 
ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் 
இயற்றிய 

கோமத்யம்பாஷ்டகம் 

முகுரஸமகபோலே பக்தசித்தானுகூலே 
வின்மதமாஜாலே விஷ்டபாராதிகாலே !
விரசிதசிவலீலே வல்லகீநாதலோலே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (1)

புவனஜனனி மாயே பார்வதீநாமதேயே 
த்ருதஸுகுணநிகாயே திவ்யஸௌந்தாயகாயே ! 
ஸகலவிபுதகேய மன்மனோபாகதேயே 
ஹிமகிரிவரபாலே  கோமதி த்ராஹிபாலே !! (2) 

கதன ஹரகடாக்ஷே லோகரக்ஷாவிதக்ஷே 
கலிதவிநதரக்ஷே  கல்பிதாராதிசிக்ஷே ! 
ப்ரமுதிதவீ க்ஷமாக்ஷே பக்த ஸந்தத்தமோக்ஷே
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (3)

ஸகலநிகமருபே ஹஸ்தவின்யஸ்தசாபே 
ப்ரமதிதபவதாபே சுத்ததத்வஸ்ரூபே !
மதிதஸகலபாபே தைத்யவின்யஸ்தகோபே 
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (4)

மரகதமணிஹாரே ஸல்லஸத்சே சபாரே
சமிததநுகுமாரே  யுத்தஸன்னாஹதீரே !
துரிததருகுடாரே துஷ்டஸந்தோஹகோரே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (5)

ப்ருதுலதரநிதம்பே பாஸமானோஷ்டபிம்பே 
சரிதருசிரகதம்பே சந்தரதுல்யாஸ்யபிம்பே !
ஸுசரிதநிகுரும்பே சூலவித்வஸ்தசும்பே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (6)

சுகசிசுகலபாஷே சோபிமுக்தாவிபூஷே
விரசிதரிபுரோஷே பத்ரகாள்யாதிவேஷே !
சசதரதரயோஷே மத்ஸ்யபக்வாபிலாஷே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (7)

நிகிலபயகபூத ப்ரேதபைசாசஜாதா: 
ஜ்வரபயவிஷவாத க்ருரயுத்ஸன்னிபாதா !
அதிசமனஸமேதா யத்கடாக்ஷாத்ப்ரபீதா :
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (8)

- சுபம்- 









ஞாயிறு, 10 ஜூன், 2012

தேன் துளி



                                                             

"ரு காரியம் கடினமாக இருக்கிறது என்பதற்காக அதை விட்டுவிடக் கூடாது. மாறாக , அது கடினமாக இருப்பதற்குத் தக்க , நாம் அதிக உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற வேண்டும். "
                                                                                                        -  ஸ்ரீ அரவிந்த அன்னை 

வியாழன், 7 ஜூன், 2012

ஸ்ரீ கோமதி அஷ்டகம்


ஸ்ரீ குருப்யோ நம  :
(ஸ்ரீ ஆதி சங்கரபகவத்பாதாள் இயற்றியது)
சங்கரநயினார் கோவில் ஸ்தல மஹாத்மியம்

பூகைலாசே மனோக்யே புவன வ்ருதே
நாக தீர்த்தோப கண்டே ரத்னபராஹாரமத்யே 
ரவிசதுர்ச மஹாயோகபீடே நிஷண்ணம்
ஸம்ஸார   வ்யாதி வைதயம் சகலஜனனுதம்
 சங்க பத்மார்ச்சிதாங்க்ரீம் 
கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம் 
ஸ்ரீ சங்கரேசம் நமாமி 

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளியது 
ஸ்ரீ கோமதி அஷ்டகம் 

லக்ஷ்மீவாணீ  நிஷேவிதாம் புஜபதாம் 
லாவண்ய சோபாம், சிவாம் 
லக்ஷ்மீ வல்லப பத்மஸம்பவநுதாம் 
லம்போத ரோல்லாஸினீம் 
நித்யம் கெளசிக வந்த்ய மானசரணாம்  
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம் 
ஸ்ரீ புன்னாக வநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா  கோமதி (1)

தேவீம் தாநவராஜ தர்பஹரிணீம் 
தேவேந்த்ர ஸம்பத் ப்ரதாம் 
கந்தர்வோரக யஷ ஸேவிதபதாம்
ஸ்ரீ சைல மத்யஸ்திதாம்
ஜாதீ சம்பக மல்லிகாதி குஸுமை
ஸம்சோபிதாங்கிரி  த்வாயாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (2)

உத்யத்கொடி விகர்த்தனத்யுதி நிபாம் 
ஔர்வீம்   பவாம்  போநிதே 
உத்யத் தாரக நாத்துல்ய வதனாம் 
உத்யோதயந்தீம் ஜகத் 
ஹஸ்தர்யஸ்த சுகப்ரணாள ஸஹிதாம் 
ஹர்ஷப்ரதாம் அம்பிகாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (3)

கல்யாணீம் கமணீ யமூர்த்தி சகிதாம் 
கர்ப்பூர தீயோஜ்வலாம் 
கர்ணாந்தாயத லோசனாம் களரவாம்
காமேஸ்வரீம் சங்கரீம் 
கஸ்தூரீ திலகோஜ்வலாம் சகருணாம்
கைவல்ய ஸௌக்யப்ரதாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (4)

வைடூர்யாதித ஸமஸ்ரத்ன கசிதே 
கல்யாண ஸிம்ஹாஸனே  
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம் 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம்
பத்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம் 
பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (5)

சைலாதீச ஸுதாம் ஸரோஜ நயநாம்
ஸர்வாக வித்வம்ஸினீம்  
ஸன்மார்க்க ஸ்திதலோகரக்ஷ ஜனனீம் 
ஸர்வேச்வரீம்  சாம்பவீம் 
நித்யம் நாரத தும்புருப்ரப்ருதிபி 
வீணா விநோதஸ்திதாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (6)

பாபாரண்ய தவானவாம் ப்ரபஜதாம் 
பாக்யப்ரதாம் பக்திதாம் 
பக்தாபத்குலசைல போதன பவிம்
ப்ரத்யஷ  மூர்த்திம் பராம் 
மார்க்கண்டேய பராசராதி முனியி 
ஸம்ஸ் தூயமானாமுமாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (7)

சோராரண்யா நிவாஸினாம்  ப்ரதிதினம் 
ஸ்தோத்ரேண  பூர்ணாந நாம்
த்வத்பாதாம் புஜஸக்த பூர்ணமனஸாம் 
ஸ்தோகேத ரேஷ்ட ப்ரதாம் 
நாநா வாத்யவைச்ச சோபிதபதாம் 
நாராயணஸ்யானுஜாம்  
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (8)



- சுபம்- 






ஞாயிறு, 3 ஜூன், 2012

காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யரின் வாக்கும் வாழ்க்கையும்





நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகளின் , அவதார நன்னாள் நாளை , வைகாசி மாதம் அனுஷ நட்ச்சத்திரத்தன்று வருகிறது. தமது நோக்காலும், வாக்காலும், வாழ்க்கை முறையாலும் அவர் உபதேசித்த விஷயங்கள் " தெய்வத்தின் குரலாக " வெளிவந்துள்ளது. 

"ஊருக்குத்தான் உபதேசம்" என்று இல்லாமல் , தமது உபதேசத்திற்கேற்றவாறு தமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்கள் பெரியவா. "தெய்வத்தின் குரல் " முதலாம் பாகத்தில் "எளிய வாழ்வு" எனும் தலைப்பில், மகாஸ்வாமிகள் கூறிய அறிவுரயினையும் , அதனை எப்படி தமது வாழ்விலே கடைப்பிடித்துக் காட்டினார்கள் என்பதனை உணர்த்தும் புகைப் படத்தினையும் காணும் போது நமது மனம் நெகிழ்கிறது. 

தெய்வத்தின் குரல் - எளிய வாழ்வு 



"வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. 

உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறோம்.

 நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்கு பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.

ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட நேரத்தில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதால, வீட்டை ஏர் கன்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்."

 நன்றி : தெய்வத்தின் குரல் , http://mahaperiyavaa.wordpress.com

வெள்ளி, 1 ஜூன், 2012

தேன் துளி





இறைஅநுபூதி 

சாதகர் :


"இறைஅநுபூதி அடைதல் " என்பதன் உண்மையான பொருள் என்ன ? 

ஸ்ரீ அன்னை :

தன் பொருள்...

உன்னுள் அல்லது உனது ஆன்மிகச் சிகரங்களில் இறைவனது ஸாநித்தியத்தை உணர்தல் ,

அவனுடைய ஸாநித்தியத்தை உணர்ந்ததும் அவனுக்கு உன்னை முற்றிலுமாகச் சரணாகதி செய்தல், 

அதன் மூலம் அவனுடைய சித்தத்தைத் தவிர உனக்கென தனி இச்சை இல்லாத நிலை பெறுதல்,

இறுதியில் உனது உணர்வை அவனுடைய உணர்வுடன் ஐக்கியமடையச் செய்தல். அதுவே இறைஅநுபூதி ஆகும். 

( நன்றி : வைகறை - ஸ்ரீ அரவிந்த ஆசிரம தமிழ் காலாண்டு )