ஒரு பரிகாரத்தின் பொருட்டு ஒரு பசுவையும், கன்றையும் எதாவது ஒரு சிவாலயத்திற்கு அர்பணிக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியதன் பேரில், சதுரகிரி மலைக்கு பசுவைக் காணிக்கையாக அர்பணிக்க ஏற்பாடு ஆயிற்று.
நாங்கள் அதற்க்கு முன்பு சதுரகிரி சென்றது இல்லை என்பதால், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியை நாடினோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலேயே வசிப்பவர், மற்றும் அவருக்கு சதுரகிரி மலையை அடுத்து கொஞ்சம் விவசாய நிலங்களும் உண்டு.
அவர் எங்களது வேண்டுதலைக் கேட்டு , " சாதாரண பசு மாடுகள் மலையில் வசிக்காது, எனவே மலை மாடுகள் என ஒரு வகை உண்டு , அதனைத்தான் மலை மேல் காணிக்கையாக்க இயலும் " எனக் கூறியதன் பேரில், மலை மாடு வாங்கும் பொறுப்பையும் அதனை மலை மேல் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டு , நாங்கள் அனைவரும் மறுநாள் சதுரகிரி செல்வதாய் முடிவு செய்யப்பட்டது.
அந்த நண்பரும் , எனது தந்தை மற்றும் எனது மாமனார் ஆகியோர் ஒரு நல்ல மலை மாடாகப் பார்த்து அதன் கன்றோடு சேர்த்து விலை பேசி முடித்தனர்.
மலை மாடு என்பது பசு மாட்டிலேயே பெரிய உருவமாக இருக்கும். மலை அடிவாரங்களில் அதிகம் வளர்க்கப்படும். அதற்க்கு பெரும்பாலும் மூக்கணாம் கயிறு கூட போட மாட்டார்கள். அதனால் அது முரட்டுத்தனமாக இருக்கும்.
அம்மாட்டினையும் , அதன் கன்றையும் மலை மேலே அழைத்துச் செல்ல , மலை வாழ் பணிகர் ( சதுரகிரி மலை மேலேயே வாழ்பவர் ) ஒருவரையும் வேறு இரு கூலி ஆட்களையும் துணையாக அமைத்துக் கொண்டு , எங்கள் குடும்ப நண்பர் முதல் நாள் சதுரகிரிக்கு கிளம்பினார்.
( தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக