சதுரகிரி பயணம் என்பது எவ்வளவு கடினமானது என்பது அதில் பயணம் செய்தவர்களுக்கே தெரியும். அதிலும் ஒரு மாட்டினையும் அதன் கன்றினையும் மலை மேல் அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினம் என்பது சொல்லாமலேயே புரியும்.
முதல் நாள் காலையில் விரைவாகப் புறப்பட்ட நண்பரின் குழு, மாட்டினையும் கன்றினையும் மிகவும் ஜாக்கிரதையாக அழைத்துச்சென்று உள்ளனர். கன்றினை முன்னாலே அழைத்துச் செல்ல , பின்னே மாட்டினை அழைத்துச் சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட தூரம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. வழுக்குப்பாறை எனும் இடம் வந்தவுடன், மிகவும் சிரமப்பட்டு மாட்டை அதில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.அதில் பாதி வழியைக் கடந்த மாடு அதற்க்கு மேல் நகராமல் அங்கேயே படுத்து விட்டது.
எவ்வளவோ முயற்சி செய்துப் பார்த்தும் மாடு எழுந்திருக்கவே இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து எமது நண்பர் குழுவினர் நின்றிருந்த வேளையில் , மலை மேலிருந்து கீழே இறங்கி ஒருவர் வந்துள்ளார்.
இவர்கள் நிலையைக் கண்டு , அதன் காரணத்தையும் கேட்டு அறிந்த அவர், தமது பையில் வைத்து இருந்த விபூதியை எடுத்து "சுந்தர மகாலிங்கம் , சந்தன மகாலிங்கம் " எனப் பிரார்த்தித்து மாட்டின் மீது போட்டதுதான் தாமதம் , அதுவரை எழாத மாடு உடனேயே எழுந்து நடக்கத் துவங்கி விட்டது.

என்னே மகாலிங்கத்தின் மகிமை ! .
தன்னை நாடி வரும் அடியார்கள் பயணத்தை மட்டும் அல்ல , ஐந்தறிவுடைய ஜீவன்களிடமும் கருணைக் கொண்டு அதனுடைய பயணத்தையும் காத்தருளும் அய்யனின் மகிமையை என்னென்பது.
தன்னை நாடி வரும் அடியார்கள் பயணத்தை மட்டும் அல்ல , ஐந்தறிவுடைய ஜீவன்களிடமும் கருணைக் கொண்டு அதனுடைய பயணத்தையும் காத்தருளும் அய்யனின் மகிமையை என்னென்பது.
நாங்கள் குடும்பத்துடன் மறுநாள் அங்குச் சென்று , (அது ஒரு ஐப்பசி அம்மாவாசை நாள்) மாட்டினை இறைவனுக்கு காணிக்கையாக்கிவிட்டு , மனமார வழிபட்டுத் திரும்பினோம்.
சந்தன மகாலிங்கம் போற்றி !
சுந்தர மகாலிங்கம் போற்றி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக