திங்கள், 1 டிசம்பர், 2014

மஹா அவதார் க்ரியா பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா
கி.மு.203 ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் நாகராஜ் என்ற பெயரில் அவதரித்தவர் ஸ்ரீ மஹா  அவதார் பாபாஜி அவர்கள்., பழநி மலையில் ஸ்ரீ போக மஹரிஷியிடம் ஆஸ்தான சீடராக இருந்து யோகம் பயின்றவர். மேலும் ஸ்ரீ அகத்திய மஹரிஷியிடம் க்ரியா யோகம் பயின்று , இமய மலையில் உள்ள பத்ரிநாத்துக்கும் மேல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  சொரூப சமாதியில் ஆழ்ந்துள்ளார் இவர்.

நிகழும் ஜய வருடம் கார்த்திகை மாதம் 21 ம் தேதி 07/12/2014 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9.30 மணிக்கு ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா சென்னை , பூவிருந்தவல்லி , ராமானுஜ கூடத் தெருவில் உள்ள  ஜெயின் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து ஆன்மீக மெய்யன்பர்களும் இதில் கலந்துக் கொண்டு குரு அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நிகழ்ச்சி நிரல்
7 / 12 /2014 - ஞாயிறு
காலை        9.30 மணிக்கு கலச பூஜையும் , மஹா யாகமும் 
காலை      11.00  மணிக்கு அபிஷேகம் 
நண்பகல்  12.00  மணிக்கு அர்ச்சனை , அலங்காரம் 
நண்பகல்  12.30  மணிக்கு தீப ஆராதனை , திரு உருவ படம்  வழங்கல் 
பிற்பகல்     1.00  மணிக்கு சம பந்தி போஜனம் , பிரசாதம்  விநியோகம் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்ஙனம் 
பூவிருந்தவல்லி அன்பர்கள் மற்றும் வெளியூர் அன்பர்கள் 

தொடர்புக்கு 
9600037092 
9841704501 
9150010740
8925548022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக