ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சுவாமிமலையில் மௌன குரு


சுவாமிமலையில் மௌன குரு

மௌனத்தில் இருந்து ஞானம் வழங்கிய மகான்கள்
நம் மண்ணில் பலர் உண்டு .

நமது காலத்தில் ,
நம் கண் முன்னே
அப்படி ஒரு குருவாய் வாழ்ந்து வரும் சித்த புருஷர்தான்
சுவாமிமலை மௌன குரு - "திண்ணை  சித்தர் " என அழைக்கப்படும்
ஸ்ரீ. சத்குரு  பிரகாசம் சுவாமிகள் .

 சுமார் 55 வயது மதிப்புள்ள பிரகாசம் சுவாமிகள் , சுவாமிமலையில்தான் அவதரித்துள்ளார்கள்.

பள்ளி பருவத்திலேயே தனை மறந்து தியானத்தில் ஆழ்ந்துவிடும்  சுவாமிகள் , அவரது குரு அருளால் ஆட்கொள்ளப்பட்டு  தற்போது சுவாமிமலை வீதிகளில் வலம் வருகிறார்கள்.

 சித்த புருஷர் என்றால்...
அவர் ஏதேனும் உபதேசம் செய்கிறாரா ?
சித்து விளையாட்டுக்கள் செய்கிறாரா  ?
மந்திர தீட்சை  செய்கிறாரா ?

இப்படி பல கேள்விகள் நம்முள் எழுவது உண்டு.
இவை அனைத்திற்கும்
"இல்லை"
என்பதே பதில்.

அவர் ஏதும் உபதேசிப்பது  இல்லை.
அவரது மௌனமே உபதேசம் !
அவர் ஏதும் சித்துக்கள் செய்வது இல்லை.
அவரது மௌனமே மிகப் பெரிய சித்து !
 அவர் ஏதும் மந்திர தீட்சை அளிப்பது இல்லை.
 அவரது மௌனமே மேலான தீட்சை !


யாருடனும் பேசுவதில்லை.
தன் தேவைகளுக்காகவும் பேசுவதில்லை.
உண்மையில் தேவை என்பது அவருக்கு ஏது ?

குளிப்பது இல்லை
ஆயின் ஒருபோதும் அவரிடம்
 நாற்றம் இல்லை

வெள்ளை வேஷ்டி
வெள்ளை துண்டு
ஜடை முடி
செருப்பில்லா கால்கள்
சதா லயத்தில் ஆழ்ந்த கண்கள் 
கண்களில் ஞான கனல்
இந்த எளிய தோற்றம்தான்

திண்ணை சித்தர் சுவாமிகள் 

நாடிவருவோர் தரும் பண்டங்களை
ஓரிரு துண்டுகள்  உண்பது உண்டு
எப்போதாவது
அதுவும் அடியவரின் வினை தீர்க்கவே !

ரத வீதிகளில் எப்போதும் ஓயாத நடை.
சிலபோது
 காலியாய் உள்ள   திண்ணைகளில்  ஓய்வு.

" அவரைப்   நான் பார்த்தேன் ,
  அவர் என்னைப் பார்த்தார்,
 எனக்கு இன்ன பலன் ஏற்ப்பட்டது "
 என கூறியபடி நாள்தோறும்
 பெருகும் மக்கள் கூட்டம்

தொலைக் காட்சிகளும்
 பத்திரிக்கைகளும் தொடர்ந்து
 அவரை வெளிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

மக்கள் பக்தி உணர்வோடு அவரை நாடினாலும்
அவரது உயர் உணர்விற்கு
ஊரு விளைவிக்காத வண்ணம்
அவரைத்  தொடாமலும் ,
அவரோடு பேசியேத் தீர வேண்டும்
என்று அவரைச்   சுற்றி சுற்றி வராமலும் இருந்தால்
மிகவும் நன்று.

சுவாமிகளின் மகிமைகள் தொடரும் ...

குருவே சரணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக