செவ்வாய், 29 ஜனவரி, 2013

நித்திய பூஜை இன்றி காத்திருக்கும் v .நாங்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்


மதுரை  அருகே உள்ள காரியாப்பட்டி என்ற ஊரில்  இருந்து சுமார் 10 k .m . தொலைவில் அமைந்துள்ள் சிறிய கிராமம்தான் v . நாங்கூர் . இதன் முழு பெயர் வைரவன் நாங்கூர். ஸ்ரீ கால பைரவர் தனி ஸந்நிதி  கொண்டு கிழக்கு நோக்கி 6 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அற்புதமான ஸ்தலமாகும், இந்த பைரவரின் பெயரில்தான் இவ்வூர் வைரவன் நாங்கூர் என அழைக்கப்படுகிறது.

இதே ஊரில் , அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி சந்நிதி. ஆலயம் என்ற ஒன்று இருந்தது என நம்புவதே கஷ்டமாக இருக்கும் விதத்தில், கருவறை பீடம் மட்டுமே தற்போதுக்  காணப்படுகிறது.

தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தியவாறு , சங்கு - சக்கரம் தரித்து கிழக்கு நோக்கி வெட்ட வெளியில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.

அருகிலேயே ஸ்ரீ இராமானுஜர் மற்றைய ஆழ்வார்கள் சிலைகள் பின்னப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தினை பராமரித்து வந்த பூர்விக மக்கள் தற்போது இடம்பெயன்றுச் சென்றுவிட்டனர்.

கடந்த 19-01-2013 அன்று பக்தர்கள் ஒன்றிணைந்து , வெகு வருடங்களுக்குப் பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து,  அதி விரைவில் இவ்வாலயம் முழுமையாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று பெருமாளுக்கு நித்திய  பூஜைகள் நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

தற்காலிகமாக  ஆஷ்பெட்டாஷ்  கூரை ஒன்றை அமைக்க அவ்வூர் பஞ்சாயத்து தலைவர்  முயற்சி செய்து வருகிறார். இந்த இறை பணியில் ஈடுபட விரும்புபவர்கள்  "பக்தி யுகத்தையோ" அல்லது , நேரடியாக அவ்வூருக்குச் சென்றோ தங்களால் இயன்ற  உதவிகளைச் செய்யலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக