வெள்ளி, 8 மார்ச், 2013

விருதுநகர் மாவட்டம் - செட்டிகுறிசசி விலக்கு ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது ஆலயம்


 200 ஆண்டுகள் பழமையான சமாது ஆலயம் 

விருதுநகர் மாவட்டம் , பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் , செட்டிகுறிச்சி விலக்கு ஆகும். இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாது ஆலயம் இது ஆகும்.
ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது பிரதான சாலையின் மேற்புறம் அமைந்துள்ள ஆலயம் இது. கர்பகிரகம் மட்டும் உள்ள ஆலயம். சிறு விமானம் அமைந்துள்ளது. ஆலயம் முகப்பில் ஸ்ரீ வீரபத்திர சாமி சமாது - வருடம் 1812 என்று செதுக்கப் பட்டு உள்ளது.


இந்த சுவாமி அருப்புக்கோட்டை நகரில் வாழ்ந்து இந்த இடத்தில் ஐக்கியம் அடைந்து இருப்பதாகக் கூறபடுகிறது. தினமும் இங்கே விளக்கு மட்டும் ஏற்றப் படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக