சனி, 8 செப்டம்பர், 2012

சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி
 ( சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி  )

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அமைந்திருக்கும் சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி கும்பாபிஷேகத்திற்குப்   பிறகு, புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. நான்கு தூண்களோடு அமிந்துள்ள வெளி மண்டபத்தினை அடுத்து , அர்த்த மண்டபம் உள்ளது. இதில் பலி பீடமும் , நந்தியும் அமைந்துள்ளன. அடுத்து கருங்கல்லால் அமைக்கப் பத்துல்ல கருவறையில், ஜீவ சமாதி அமைந்துள்ளது. சிறிய மதிலுடன் கூடிய வெளி சுற்று உள்ளது.(  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் )
 இந்த ஆலயத்தில் ஈசான்ய மூலையில், மேற்கு நோக்கிய வாறு அருள்கிறார் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி. இவருக்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் அதி காலையில் 3 மணி அளவில் தொடங்கி, யாகங்களும் பூஜைகளும்    நடைப் பெறுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக