சனி, 8 செப்டம்பர், 2012

சித்தர்களால் பூஜிக்கப்பட்டதாகக் கருதப்படும் படித்துறை விநாயகர்




அருப்புகோட்டை நகர்  முற்காலத்தில் , வில்வ மரங்கள் நிறைந்த வில்வ வனமாக இருந்துள்ளது. இங்குள்ள மீனாக்ஷி அம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம், பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னனுக்கு ஒரு சாபத்தினால், உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டு, அந்த சாப நிவர்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக் குளத்தினை வெட்டினான்.

அவ்வாறு அந்த திருக்குளம் வெட்டும் காலத்திலே , அந்த இடத்திலே புதையுண்டுக் கிடந்த , அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன்  தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். 
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக் குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள ஆஸ்திக அன்பர்களால் , இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப் பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் முறையாக நடைப் பெற்று வருகின்றன. 

இந்த ஆலய வடிவமைப்பு , சென்னை திரு.கணபதி ஸ்தபதியினால் செய்யப்பட்டு உள்ளது. ஆலயம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 

அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு இவர் ஒரு வரப்ரசாதி என்பது அனுபவ உண்மை. 



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.  
 
- இந்த கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும்  பெறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக