சனி, 26 மே, 2012

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
நமது சனாதன தர்மத்திலே மூன்று முக்கிய ஆச்சார்யர்களில் ஒருவரானவர்  ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யார் ஆவார். தமது குரு தமக்கு அளித்த எட்டெழுத்து மந்திரத்தினை , உலகுக்கெல்லாம் உவந்தளித்த உன்னதனமானவர். 

ஸ்ரீ  ராமானுஜரின் கையெழுத்து பிரதி ஒன்று சமீபத்திலே   கிடைக்கப் பெற்றேன். இந்த கையெழுத்து  ஒரு வெள்ளை பேப்பரில் பிரிண்ட் அவுட் செய்யப்பட்டு  இருந்தது. ஏதோ ஒரு ஆலய கல்வெட்டிலே இருக்கக் கூடிய இந்த கையெழுத்தினை ஸ்கேன் செய்து , பிரிண்ட் அவுட் எடுத்துள்ளார்களாம். 

இந்த வெள்ளை காகிதத்திலே நமது தீராத கோரிக்கைகளை  எழுதி , ஸ்ரீ  ராமானுஜரிடம் பிரார்த்தனை செய்து , நமது வீட்டு பூஜை அறையிலே இதை வைத்து வழிபட்டுவர , நமது கோரிக்கைகள் அதிவிரைவில் நிறைவேறுவதாக கூறுகிறார்கள். 

எனக்குக் கிடைக்கப் பெற்ற , இந்த மகத்துவம் எல்லோருக்கும் சென்று அடைய , ஸ்ரீ  ராமானுஜரின் வழியிலே, பக்தி யுகத்திலே இதை வெளியிடுவதை  எனது பாக்கியமாகக் கருதுகிறேன். இதன் பலன்கள் அனைத்தும் ஸ்ரீ ரமானுஜரையேச் சாரும். 

தேவைப் படுவோர்  ஸ்ரீ  ராமானுஜரின் கையெழுத்தினை டவுன் லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக