புதன், 30 மே, 2012

ஒரு புத்தகமும் - சில விஷயங்களும்....நாம் அடிக்கடி ஏதாவது புத்தகங்கள் வாசிக்கிறோம் . அதில் மனதிற்கு நிறைவை தந்த விஷயங்கள் இங்கே.....


"நடமாடும் தெய்வம் " என வணங்கப்பட்ட , காஞ்சி மாமுனிகள் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகள் குறித்த  புத்தகம் ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகாஸ்வாமிகள் குறித்த எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்துள்ளன. நான் வாசித்த புத்தகம்  "கச்சிமூதூர் கருணாமூர்த்தி " என்பதாகும்.

ஸ்ரீ மடத்திலே மகாஸ்வமிகளுடன் இருந்து தொண்டு புரிந்த திரு. ஸ்ரீ மடம் பாலு அவர்கள்  , மகாஸ்வாமி குறித்து தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்களை ,திரு சத்யகாமன் அவர்கள் புத்தக வடிவிலே நமக்கு கொடுத்துள்ளார்கள்.

அதில் ஒரு பகுதி ....ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை 
   
சாயங்காலம் ஐந்து மணி. பெரியவாள், ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

அவர்கள் வஸ்த்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார். பரபரப்புடன் கைகளை நீட்டி , காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.

"என்ன அவசரம் ? " என்றார்கள் , பெரியவாள்.

"பெரிய சடைபூரான் இருக்கு வஸ்திரத்திலே..."

பெரியவா, கண்ணனிடம் வஸ்த்திரத்தைக் கொடுத்தார்.

" பூரானை ஒண்ணும் செய்யாதே .. ஹிம்ஸை செய்யாதே ... ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு. ... பூரான் , ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை... ஒண்ணை அழிச்சாலும், ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி ..."

 பூரான் - ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை , பெரியவாளுக்கு.


இதைப் போல பல அனுபவங்கள் இந்த புத்தகத்திலே காணப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் , நம்மை பரவசப் படுத்திடக் கூடியவை.


புத்தகத்தின் பெயர் :  கச்சிமூதூர் கருணாமூர்த்தி 


ஆசிரியர்
 ஸ்ரீ மடம் பாலு தந்து உதவிய செய்திகளுக்கு , நிகழ்ச்சி வடிவம் கொடுத்துத்   தொகுத்தவர் சத்யகாமன் 

பதிப்பகம் :
இலக்கியப்பீடம் பதிப்பகம்
3 , ( பழைய எண் : 2 ) ஜெயசங்கர் தெரு,
மேற்கு மாம்பலம் , சென்னை
போன் : 23712485
முதற்பதிப்பு :  2008
விலை : ரூ.100 /-
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக