ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கழுகுமலை ஸ்ரீ மிளகாய் பழ சித்தர் ஜீவ சமாதி வீடியோ காட்சிகள் # 1

கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி ஆலய கிரிவல பாதையில் அமைந்துள்ளது  ஸ்ரீ மிளகாய் பழ  சித்தர் ஜீவ சமாதி ஆலயம்.  ஒரு வயதான பெண்மணிதான் இவ்வாலய வழிபாட்டினை மிக சிரத்தையாக செய்து வருகிறார். இவர்களது குடும்பத்தார்தான் பரம்பரையாக இவ்வாலய பூசையினை செய்து வருகின்றனர்.

இவ்வாலயத்தில் மிளகாய் பழம் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த மிளகாய் பழத்தினை ஒரு   சொம்பு தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மறுநாள் அந்த பழத்தினை எடுத்து விட்டு அந்த தண்ணீரினை வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டும். பின் மீண்டும் அந்த சொம்பில் தண்ணீர் விட்டு அந்த மிளகாய் பழத்தினை அதில் போட்டு பூஜையில் வைக்க வேண்டும். இவ்விதமாக      மூன்று நாட்கள் நாட்கள் செய்ய வேண்டும். 

மூன்றாம் நாள் அந்த மிளகாயினை நமது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நமது நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. இந்த ஜீவ சமாதிக்கு மிளகாய் பழத்தினை காணிக்கையாகக் கொண்டு சென்று சமர்ப்பிக்கும் வழக்கமும் உள்ளது. 


ஸ்ரீ மிளகாய் பழ சித்தர் ஜீவ சமாதி வீடியோ காட்சி # 1 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக