திங்கள், 30 ஏப்ரல், 2012

ஜகத்குருவின் இராமயன்பட்டி விஜய யாத்திரைஜகத்குரு   ஸ்ரீ  ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசுவாமிகள்  தனது  விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக , திருநெல்வேலி மாவட்டம் , இராமயன்பட்டி கிராமத்திற்கு 29/04/2012  அன்று விஜயம் புரிந்தார்கள். அவர்களுக்கு , கிராமத்தின் சார்பினில் மேல தாளங்களுடனும் , வேத கோஷங்களுடனும் பூரண கும்ப மரியாதையுடன்  மனம் நிறைந்த வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. 

கிராமத்தின் பெண்கள் தீப ஒளியுடன் கூடிய ஹாரத்தி காட்டி தங்களது பக்தியினை தெரிவித்தனர். இராமயன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள , அக்ரஹாரம் தெரு   ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகள் , அங்கு நடைபெற்ற தீபாராதனை பூஜையினில் பங்குபெற்று , தரிசனம் செய்தார்கள். 

பின்பு அங்கு கூடி இருந்த பக்தர்களுக்கு அருளாசியும் , மந்திராக்ஷதையும் வழங்கிய மஹாசுவாமிகள் , அங்கிருந்து புறப்பட்டு , இராமயன்பட்டியில் அமைந்துள்ள "பண்ணை இல்லத்திற்கு " சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு , பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. 

அன்று இரவு பண்ணை இல்லத்திலே , மகாஸ்வாமிகள் "சந்திரமௌலீஸ்வரர் " பூஜையினை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். 

மஹாசுவாமிகளுக்கு  இராமயன்பட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் அளிக்கப்பட  வரவேற்ப்பினை காண இங்கே கிளிக் செய்யவும் .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக