திங்கள், 9 ஜனவரி, 2012

கழுகுமலை பௌர்ணமி கிரிவலம்

கழுகுமலை பௌர்ணமி கிரிவல தரிசனம்

                                       (கிரிவல பாதையில் மலையின் தோற்றம் )

8 /1 /2012 அன்று கழுகுமலையில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாலை 6 மணி அளவிலே கிரிவலம் இறை நாமத்துடன் துவங்கியது. அன்று ஆருத்ரா தரிசனம் என்பது கூடுதல் சிறப்பு.

நவதானியமும். டயமன்ட் கல்கண்டும் கலந்து கொண்டுவரும்படி "ஆன்மிக கடல் " அன்பர்கள் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப் பட்டு இருந்தனர். அதன்படி நிறய பேர் கொண்டு வந்து கிரிவல பாதை முழுவதிலும் அதனை தூவி வந்ததைக் காண முடிந்தது.மாலை அரையிருட்டில் மலையின் தோற்றம் 
நவதானியம் மற்றும் டயமன்ட் கல்கண்டை தூவிய படியே கிரிவலம் செய்யும் பக்தர்கள். கிரிவல பாதையில் கம்பீர விநாயகர் 


கிரிவல பாதையில் நான் கண்ட முதியவர்.

எளிய தோற்றம்
கனிந்த முகம் ,
நெற்றி நிறைய திருநீறு
மெதுவான நடை.  கிரிவல பாதையின் பசுமை கோலம்
 
கிரிவல பாதையில் அமைந்து உள்ள சித்தர் ஆலயம்அய்யா.திரு. சிவா.மாரியப்பன் அவர்கள் மஞ்சள் ஆடையில் முன்னே செல்ல , "ஆன்மிக கடல் " அய்யா.திரு.வீரமணி அவர்கள் பின்னே மலையையும், மக்கள் கிரிவலம் செல்லும் காட்சிகளையும் தனது கேமரவிலே பதிவு செய்தபடி பின் தொடர்ந்தார்.கோவில் தூணில் காணப்படும் அற்புதமான சிற்பம். இதில் உள்ள தெய்வம் யார் என யாரவது கூறினால் நன்று.


 இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பயன்படும் தெப்பக்குளம்.


 
 இரவில் ஒளிரும் கழுகுமலை ஆலயம்
சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் கிரிவலம் நடைப் பெற்றது.அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள்  கிரிவலம் முடிந்தவுடன் அன்பர்களின் பிரச்சனைகளுக்கு எளிய பரிகாரங்களை எடுத்துக் கூறினார்கள் .பொதுவாக ஆற்றங்கரை ஓரம் அமைந்த கோவில், மலைக்கோவில் , கடற்கரைக் கோவில் இவற்றில் பௌர்ணமி நாட்களில் வளம் வருவது சிறப்பு எனக் கூறுவார், நாமும்  இதனை பயன் படுத்துவோம். 


குருவே சரணம்.
 வாழ்க வளமுடன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக