செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

திண்ணை சித்தர் # 2

சுவாமி மலை மௌனகுரு 



 சுவாமி மலையில் இருக்கும் , "திண்ணை சித்தர் " பிரகாசம் சுவாமிகள் குறித்த செய்திகள் நாளும் பரவி வருகிறது.

நாம் வாழும் காலத்தில் உள்ள உண்மையான மகானைக் காண மக்கள் நாளும் சுவாமி மலையை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். 

 சுவாமிகளுக்கு கடந்த 20 வருடங்களாக சென்னையைச் சார்ந்த அன்பர் ஒருவர் மதம் தோறும் புதிய வேஷ்டிகள் வாங்கி வழங்கும் சேவையைச் செய்து வருகிறார்கள்.

சுவாமிகள் கழற்றிபோடும் வேஷ்டிகளை சில உள்ளூர் அன்பர்கள் துவைத்துப் போடும் பணியினைச் செய்து வருகிறார்கள். திரு.ஞான கிருபாகரன் என்ற ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவரும் அப்பணியினைச் செய்து வருகிறார்கள் .

 அவர் தனது அனுபவத்தைக் கூறும்போது ...
" திண்ணை சித்தரை நாடி வரும் பக்தர்கள் சில நாட்களில் அவரை  இயற்கை உபதைகளைக் கழிக்க கூட விடாமல் சூழ்ந்துக் கொள்கின்றனர்.
சில நாட்களில் சுவாமிகள் தனது வேஷ்டியிலேயே மல ஜலம் கழிக்கும்படியான நிலை உருவாகிவிடுகிறது. அவருக்கு அதுவும் தெரிவது இல்லை .
அந்த வேஷ்டிகளைத் துவைக்கும் பொது , துர்நாற்றம் வீசுவது இல்லை , மாறாக மேலான வாசனைதான் 'கம கம ' என வீசுகிறது. "
என ஆச்சர்யமாகவும் , பரவசமாகவும் கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக