ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

யோகி ராம் சுரத் குமார் குரு மகராஜ்யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சூரத் குமாரே 
ஜெய குரு ராயா!

தாம் கட்டும் தலைப்பாகையால்
எங்கள் கட்டுக்களைக் களைந்தீர்!
நாளும் வெடி சிரிப்பினிலே
எங்கள் வினையாவையும் விரட்டினீர்!
ஓலை விசிறிக் காற்றால்
ஊழ் வினையாவும் போக்கினீர்!

விந்தை விந்தை ஐயா  
விண்டுரைக்க இயலா தம் செயல்கள் !
அருணாசலம் வந்து சேர்ந்த
எங்கள் சரணாகதமே!

தம் தேகத்தினை அருணாசலத்தில்
புதைத்து விதைத்து
புவி முழுதுக்குமாய் பரந்து விரிந்த
 பரந்தாமனே !

தாரக நாமத்தால் எங்கள்
தாபம் எல்லாம் தீர்த்தவரே!
நாம ஜபம் ஒன்றே எங்கள்
தவம் என பணித்தவரே !

தம் முக்தி தினத்திலே
தம் கழல் இணைகள்
 பணிகின்றோம் பகவனே  !


யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சூரத் குமாரே 
ஜெய குரு ராயா!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக