ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

விஷ்ணு பதி புண்ய காலம்

ஆங்கில வருடத்தின் கணக்குப்படி இந்த 2012ஆம் ஆண்டின் முதலாவது விஷ்ணுபதி புண்ய காலமாகவும் , தமிழ் வருட கணக்கின்படி   கர வருடத்தின்  நான்காவது விஷ்ணு பதி புண்ய காலம் (மாசி மாதம் ) 13 -02 -2012  இன்று கடைப்பிடிக்கபடுகிறது. 

இன்றைய தினத்திலே சூரிய பகவான் மகர ராசியில் இருந்து , கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மாசி மாதம் கும்ப மாதம் என அழைக்கப்படுகிறது.

காலை 1 .30 a.m முதல் 10.30 எ.m வரையிலான நேரம் வழிபாட்டிற்கு உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் , பல மடங்கு பலனைத் தர வல்லன. 

இன்றையதினம் நீர்த்தார் கடன் செய்வதோடு , ஸ்ரீமன் நாராயணன் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வழிபட சிறந்த நாள். 

நம் வறுமை நீங்கவும் செல்வ வளம் பெருகவும் இன்றைய வழிபாடு துணை புரியும் . 

குறிப்பாக இன்றைய விஷ்ணுபதி புண்ய காலத்திலே , ராம நாம ஜபதினை செய்வது சிறப்பான பலனைத் தரும் என அகஸ்தியர் ஆசிரம வலைப் பதிவினில் குறிப்பிடப் பட்டுள்ளது.  www.agasthiar.org 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக